கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 9, 2011

இந்தியாவில் உயர்கல்வி, ஆராய்ச்சி பணிகளை பலப்படுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


இந்தியாவில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளை பலப்படுத்த வேண்டும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
98வது இந்திய அறிவியல் மாநாட்டில் 03.01.2011 அன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற 4 அறிஞர்களில் 3 பேரை உருவாக்கியது தமிழகம்தான். முதல்வர் கருணாநிதி சார்பில் அனைவரையும் வரவேற்கிறேன். அதோடு, எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாநாட்டின் மையக் கருத்து முக்கியமான ஒன்றாகும். கல்வியின் மூலம் மக்களிடையே உள்ள பிரச்னைகளை தீர்க்க வேண்டும். உலகின் அனைத்து இடங்களிலும் இந்திய பல்கலைக்கழகங்கள் உருவாக்கியவர்கள் அதிகம் உள்ளனர் என்பதைக் காண முடிகிறது. உலகத்தில் உள்ள அனைத்து வளர்ச்சித் திட்டங்களிலும் இந்திய விஞ்ஞானிகளின் அறிவு பின்னணியில் இருக்கிறது. உலகில் உள்ள 100 நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள 500 நிறுவனங்களில் தங்களின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வசதிகளை நிறுவியுள்ளன.
உலகத்தில் உள்ள எல்லா இடங்களிலும் இந்திய விஞ்ஞானிகளின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாய்ப்பை இந்தியாவும் இந்தியப் பல்கலைக்கழகங்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்திய பல்கலைக்கழகங்களில் அறிவியல் ஆராய்ச்சிகளை வலுப்படுத்த இதுதான் சரியான நேரம்.
வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் கணிதம், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை மாணவர்கள் தவிர்த்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கான வேலைவாய்ப்பை தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் ஏற்படுத்த வேண்டும். பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தி வெற்றி பெற்ற நாம், கல்வியின் தரத்தையும் உயர் கல்வியையும் அதிகரிக்க வேண்டும்.
ஒவ்வொரு கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் ஏன் இந்திய அறிவியல் மையத்தைப் போலவும் ஐஐடிகளைப் போலவும் இல்லை என்பதற்கு ஒரு காரணமும் இல்லை. கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் விஞ்ஞான ஆராய்ச்சியை செய்வதற்கான திறமையான ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் மற்றும் நிதி உதவிகள் இல்லாத நிலை உள்ளது.
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி போன்றவற்றுக்கான வளங்களை அதிகரிக்க வேண்டும். இந்த திட்டங்களுக்காக தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். ஒருபுறம் சமுதாயமும் தொழிற்சாலைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மறுபுறம் ஆராய்ச்சி அமைப்புகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவையும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல் பட வேண்டும். அப்போதுதான் சமூக, பொருளாதார அமைப்புகளில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படும்.
இந்தியாவில் உள்ள உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளை பலப்படுத்த வேண்டும். இந்த மாநாடு இதை செயல்படுத்தும் என்று நம்புகிறேன். இந்தியாவை அறிவியல் தேசமாக மாற்றுவது விஞ்ஞானிகளிடம் உள்ள திறமையைப் பொறுத்து உள்ளது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் சிந்தனை மூலம் உலகத்தை வழிநடத்தி வந்தோம். அதே நேரம் மீண்டும் வந்துள்ளது.
இவ்வாறு துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment