
2-ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு பிரச்சி னையில், விலை நிர்ணயம் தொடர்பாக பிரதமர் உத்தரவு எதுவும் பிறப் பிக்கவில்லை என்று மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச் சர் கபில்சிபல் கூறினார். 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன் றுக்கு மத்திய அமைச்சர் கபில் சிபல் பேட்டி அளித் தார். அப்போது அவரிடம், 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு தொடர் பாக பிரதமர் பிறப்பித்த உத்தரவு நிராகரிக்கப் பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக் கையில் குறிப்பிடப் பட்டு இருப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில்; அப்படிப் பட்ட உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார். மத்திய கணக்கு தணிக்கை துறை தனது அறிக்கையில் தெரிவித் துள்ள சில கருத்துகளை அரசு ஏற்றுக் கொள்ள வில்லை என்றும் தெரிவித்தார். மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கை யில், ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் போதிய அளவு ஒளிவு மறைவற்ற தன்மை இல்லை என்றும், இந்தப் பிரச்சினையில் கொள்கை விதிமுறை களை செயல் படுத்து வதில் தவறு நடந்து இருப்பதாக கருதுவதாகவும், இல்லையென்றால் இது பற்றி விசாரிக்க (2001இல் இருந்தே) ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்ட ஒரு நபர் குழு அமைக் கப்பட்டு இருக்காது என் றும் கூறினார். தகுதியற்ற சில நிறுவனங்கள் உரிமம் பெற்று இருப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு கபில்சிபல் பதில் அளிக்கையில், ``அந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அரசு நோட்டீசு அனுப்பி இருக்கிறது. நோட்டீசுக்கு பதில் அளிக்க 60 நாள்கள் அவகாசம் கொடுத்து இருக்கிறோம். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் ஒரு நபர் விசாரணைக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று நம்புகிறோம். சம்பந்தப் பட்ட நிறுவனங்களிடம் இருந்து பதிலும், ஒரு நபர் குழுவின் அறிக்கையும் கிடைத்த வுடன் அரசு உரிய முடிவு எடுக்கும்'' என்றார்.
No comments:
Post a Comment