கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

பஞ்சமி நிலங்கள் பிரச்னையை ஆய்வு செய்ய குழு அமைப்பு - முதல்வர் உத்தரவு


பஞ்சமி நிலங்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
அரசு 16.01.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டப்பேரவையில் கடந்த 7ம் தேதி அளிக்கப்பட்ட ஆளுனர் உரையில், தமிழகத்தில் பல்லாண்டு காலத்துக்கு முன்பு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை, பஞ்சமர்கள் அல்லாதவர்கள் பட்டா மாறுதல் செய்து வைத்திருப்பதாகவும், காலப்போக்கில் அவற்றை பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருவதாகவும், ஆக்கிரமிப்பு செய்த நிலங்கள் பலவற்றில் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும்; ஒப்படை நிபந்தனைகள் மீறப்பட்டு, கிரயம் செய்யப்பட்டு பலருக்கு கைமாற்றப்பட்டுள்ளதாகவும்; அடிக்கடி அரசுக்கு முறையீடுகள் வருவதோடு, ஏடுகளிலும் செய்திகள் வருகின்றன.
பஞ்சமி நிலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளையும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து, அவர்களிடமே திரும்ப ஒப்படைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரைகள் வழங்க, உயர் நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் குழு அமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது என அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மு.மருதமுத்து தலைமையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஐ.வி.மணிவண்ணன், வி.கருப்பன், நிலநிர்வாக ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்றை நியமித்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தரமான தமிழ் படங்களுக்கு மானியம் : நீதிபதி தலைமையில் தேர்வுக் குழு
குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தரமான தமிழ் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்குவதற்காக நீதிபதி தலைமையில் தேர்வுக் குழு அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2007, 2008, 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில், குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படங்களில் அரசு மானியம் பெறுவதற்கு தகுதியுடைய தரமான திரைப்படங்களை தேர்வு செய்ய நீதிபதி பொன்.பாஸ்கரன் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இராம.நாராயணன், சென்னை தொலைக்காட்சி நிலைய ஓய்வுபெற்ற இயக்குனர் அ.நடராஜன், நடிகர் வாகை சந்திரசேகர், நடிகைகள் சரோஜா தங்கவேலு, ஸ்ரீபிரியா, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தி துறை செயலாளர், வணிகவரி மற்றும் பதிவு துறை செயலா ளர், வணிகவரித் துறை இணை ஆணையர், உள் துறை துணை செயலாளர் (சினிமா), எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்றை அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சின்னத்திரை விருதுகள் : நடிகர்களை தேர்வு செய்ய நீதிபதி தலைமையில் குழு
சின்னத்திரையை சேர்ந்த சிறந்த நடிகர், நடிகைகளை தேர்வு செய்து விருதுகள் வழங்குவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்வுக்குழு வை அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சின்னத்திரை கலைஞர்களுக்கு விருது வழங்கும் திட்டம் 2006ல் திமுக அரசு அமைந்த பிறகு அறிமுகப்படுத்தி, ஆண்டுதோறும் விரு துகள் வழங்கப்படுகின்றன. இதை தொடர்ந்து 2009, 2010ம் ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு அரசு சின்னத்திரைக்கான சிறந்த தொடர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர் விருதுகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சண் முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் இயக்குனர் விடுதலை, எழுத்தாளர் அஜயன் பாலா, கதாசிரியர் கண்மணிசுப்பு, தயாரிப்பாளர் டி.வி.சங்கர், நடிகர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் ராஜசேகர், நடிகை நித்யா ரவீந்தர் ஆகியோர் அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தி துறை செயலாளர், செய்தி & மக்கள் தொடர்பு துறை இயக்குனர், இணை இயக்கு னர் (மக்கள் தொடர்பு), திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முதல்வர், ஆகி யோரை அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வு குழு வினை அமைத்து முதல்வர் கருணா நிதி ஆணையிட்டுள்ளார்.


No comments:

Post a Comment