கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, November 2, 2010

ஆறாவது முறையாக கலைஞர் முதல்வராகிறார் திராவிடர் இயக்க வரலாற்று நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் அறிவிப்பு


வட சென்னை மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் திராவிடர் இயக்க வரலாறு எனும் தலைப்பில் கருத்தரங்க நிகழ்ச்சி 1-11-2010 திங்கள் கிழமை இரவு 7.15 மணிக்கு இராயபுரம் அறிவகம் திருமண மண்டபத்தில் எழுச்சியுடன் நடைபெற் றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது சிறப்புரையில் ஆற்றிய முக்கியப் பகுதி வருமாறு:

தி.மு.க. இலக்கிய அணி சார்பில் இப்படி ஓர் அருமையான நிகழ்ச்சியை தி.மு.க. இலக்கிய அணி யின் வட சென்னை மாவட்ட செயலாளர் பி.டி. பாண்டிச் செல்வம் தோழர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்.

முத்துக்களை உதிர்த்ததுபோல்...

திராவிட இயக்க வரலாறு ஒரு நூற்றாண்டு கால வரலாற்றை அவ்வளவையும் இந்த குறுகிய நேரத்திலே சொல்லிவிட இயலாது. ஒரு நூலுக்கு உரைப்பாயிரம் போல இங்கே பேசிய டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. அவர்கள் பல கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் மிக அருமையாக முத்துக்களை உதிர்த்தது போல எடுத்துச்சொல்லி என் பணியைக் குறைத்து அவருடைய உரையில் நல்ல அஸ்திவா ரத்தை அமைத்து எனக்குக் கொடுத்திருக்கின்றார்.

இழந்ததை மீட்டெடுக்க...

திராவிடர் இயக்கம் ஏன் தோன்றியது? நாம் இழந்ததை மீட்டெடுக்கத் தோன்றியதுதான் திராவிட இயக்கம். நாட்டிலே இன்றைக்குள்ள அரசியல் கட்சிகளின் கொடிகளைப் பார்த்து இது எந்தக் கட்சிக் கொடி என்று சொன்னால் எவராலும் சொல்ல முடியாது. புற்றீசல் போல அந்த அளவுக்குக் கட்சிகள். வானவில்லில் ஏழு வண்ணத்தைத் தாண்டி எட்டாவது வண்ணத்திலும் கொடிகளை வைத்தி ருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் மக்களைப் பற்றிய நல்ல எண்ணங்களைவிட, கொடிகளின் வண்ணங்களைத் தான் உருவாக்கிக்கொண்டிருக் கிறார்கள்.

இப்படி ஓர் இயக்கத்தைக் காண முடியாது

உலகத்திலேயே திராவிட இயக்கத்தைப் போன்ற ஒரு இயக்கத்தை எங்கும் காண முடியாது. முதலில் நீதிக்கட்சி தோன்றியது. அதற்கடுத்து சுயமரியாதை இயக்கம் தோன்றியது. இந்த இரண்டு இயக்கத் திற்கும் தலைவராக இருந்திருக்கின்றார் தந்தை பெரியார் அவர்கள்.

1937 ஆம் ஆண்டு நீதிக்கட்சி படுதோல்வி அடைந் தது. பெரிய பெரிய மிட்டா, மிராசு ஜமீன்தார்கள் அமைச்சர்களாக இருந்தவர்கள். நீதிக்கட்சி பொதுத் தேர்தலில் தோற்றவுடன் ஒதுங்கிக் கொண்டார்கள்.

அப்படிப்பட்ட காலத்தில் தான் சிறையிலிருந்த தலைவர் தந்தை பெரியார்தான் நீதிக் கட்சிக்குத் தோள் கொடுத்து தூக்கி நிறுத்தக் கூடிய ஆற்றல் படைத்தவர் என்று சொல்லி அய்யா அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அறிவகம் முக்கிய இடம்

இன்றைக்கு நான் பேசுகின்ற இந்த இடம் அறிவகம். திராவிட இயக்க வரலாற்றிலே பல முக்கிய முடிவுகளை எடுத்த இடம். அண்ணா அவர்கள் இங்கிருந்து பேசினார்கள். ஒரு குழல் இங்கே இருக்கிறது. இன்னொரு குழல் பெரியார் திடல்; இரண்டும் இரட் டைக் குழல் துப்பாக்கியாக இயங்கும். இரண்டு இயக்கத்திற்கும் ஒரே பார்வை என்று சொன்னார்கள். அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புக்குரிய இடம் இந்த இடம்.

தொடர்ந்து தலைவராக கலைஞர்

இந்தியாவிலேயே இன்றைக்கு அய்ந்தாவது முறையாக முதலமைச் சராக ஆட்சி செய்துகொண்டிருக் கின்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர் கள் தொடர்ந்து 11 முறையாக, 12 ஆவது முறையாக தலைவராக இருந்து கொண்டு வருகின்ற மாபெரும் ஆற்றலாளர்.

அறிவகம் அன்றைக்குப் பழைய கட்டடமாக இருந்தது. அந்த பழை மையை மாற்றி புதுமையான கட்ட டமாக மாற்றியிருக்கின்றார் கலைஞர் - அண்ணா அறிவாலயம் போல.

மூத்த முன்னோடிகள்


அமைத்த மேடை வட சென்னையை எடுத்துக் கொண்டால் ராயபுரம், கல்மண்டபம் இதுபோன்ற பகுதிகளுக்கு தோழர் களால் அழைக்கப்பட்டு பேசியிருக் கின்றேன். பழனிச்சாமி, எஸ்.பி.டி திராவிடமணி, எஸ்.பி.வீரமணி எஸ்.ஆர். சாண்டோ, ஆரிய சங்காரன், என்.எஸ்.சங்கரரூபன், கண்ணபிரான், க. பலராமன் போன்ற முன்னோடிகள் அமைத்த மேடை இந்த மேடை. அவர் கள் கட்டிய மேடையிலிருந்து என்னு டைய உரையைத் தொடங்குகிறேன்.

திராவிட இயக்கம் என்பது ஒரு பேரியக்கம். இது ஒரு கொள்கைக் குடும்பம்.

எங்களோடு மிசாவிலே இருந்த ராமதாஸ் அவர்கள் இந்த மேடையில் இருக்கின்றார்.

பதவிக்காக தோன்றிய இயக்கமல்ல!

அருமைச் சகோதரர் டி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் சொன்னது போல ஏதோ பதவிக்காக இந்த இயக்கம் தோன்றியதல்ல. பதவி என்பது ஒரு கருவி, அவ்வளவுதான்.

மீண்டும் ஆறாவது முறையாக கலைஞர் தான் முதல்வராக வரப்போகிறார். அதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் தேவை இல்லை.

இன மீட்சிக்காக பாடுபடுகிற ஆட்சி!

இந்த ஆட்சி சமுதாய மீட்சிக்காக, சமுதாய மாற்றத்திற்காக, இன விடுதலை மீட்சிக்காகப் பாடுபட்டுக் கொண்டு வருகின்ற ஆட்சி.

நூறு ஆண்டுகால வரலாற்றை ஒரு முக்கால் மணி நேரத்தில் சொல்லிவிட முடியாது.

விமானத்தில் பயணம் செய்யும்பொழுது இதுதான் - வடசென்னை, இதுதான் அண்ணா நினைவிடம், இதுதான் கடல் என்று சொல்லு வதைப்போல- சொல்லவேண்டியுள்ளது.

திராவிடர் இயக்கம் எதற்காக தோற்றுவிக்கப் பட்டது? ஆட்சிக்கு வர இத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் தேவை, இத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் தேவை என்று பார்க்கின்ற இயக்கம் அல்ல.

கலைஞரின் நாகை உரை

சமீபத்தில் நாகப்பட்டினத்திலே கலைஞர் அவர்கள் உரையாற்றுகின்றபொழுது சொன்னார்கள், ஆட்சி என்பது திராவிடர் இயக்கக் கொள்கையை இலட்சியத்தை செயல்படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பு என்று அவர்கள் சொன்னார்கள்.

அனைவருக்கும், அனைத்தும் கிடைக்க...

ஓர் இலட்சியத்தை ஓர் இலக்கு நோக்கி செல்லக்கூடியது. ஜாதி ஒழிந்த சமுதாயம் அமையவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்று பாடுபடக் கூடிய ஆட்சி -திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொன்னார்கள்.

மக்களைத் தயார்படுத்தக்கூடிய இயக்கம் திராவிடர் கழகம்

திராவிடர் கழகம் தேர்தலிலே நிற்காத ஒரு இயக்கம். திராவிடர் இயக்கக் கொள்கையை நிறைவேற்ற மக்களை ஆயத்தப்படுத்தக் கூடிய இயக்கம். மக்களை தயார்படுத்தக் கூடிய இயக்கம், இந்த இயக்கம்.

தந்தை பெரியார் அவர்களுடைய குருகுலத்திலே பயின்றவர்தான் அண்ணா, கலைஞர், நாங்க ளெல்லாம். அதனால்தான் தி.மு.க. ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்கியவர் அண்ணா. தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணத்திற்கு சட்டவடிவம் கொடுத்தவர் அண்ணா. அதேபோல, இன்றைக்கு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்ற முதலமைச்சர் கலைஞர் அவர்கள். தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் இயற்றியவர் கலைஞர்.

தந்தை பெரியாரின் திட்டங்கள் எல்லாம் அண்ணா, கலைஞர் ஆட்சியில் சட்டமாக மலர்ந்தன. காஷ்மீரில் இருக்கின்ற பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால் - கன்னியாகுமரியில் இருக் கின்ற பார்ப்பானுக்கு நெறி கட்டும்.

ஓட்டை உடைசல் கிடைக்காதா?

அதனால்தான் ஊடகத்தை தங்களுடைய பிடியிலே வைத்திருக்கின்ற பார்ப்பனர்களும், உயர்ஜாதிக்காரர்களும் கலைஞர் ஆட்சியை குறை சொல்ல ஒரு ஓட்டை, உடைசல் கிடைக்காதா, எந்தத் துரும்பாவது கிடைக்காதா என்ற எண்ணத்துடனேயே பார்க்கிறார்கள்.

தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற வில்லை என்று கேட்பதுதான் இதற்குமுன் எதிர்க்கட்சியினரின் வழக்கம். ஆனால் ஒரு வேடிக்கை என்னவென்றால், தேர்தல் வாக்குறு திகளை ஏன் நிறைவேற்றினீர்கள் என்று கேட்கிறார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில் ஏராளமான வாக்குறுதிகளை கலைஞர் நிறை வேற்றியிருக்கிறார். சொன்னதையும் நிறைவேற்றி யிருக்கிறார். சொல்லாததையும் நிறைவேற்றி யிருக்கிறார். காரணம் என்ன? கலைஞர் அவர்கள் அடித்தட்டு மக்களுக்காகவே சிந்தித்து, சிந்தித்து பல காரியங்களை சிறப்பாக செய்து வருகிறார்.

யார் முடிவு செய்வது?

ஆறாவது முறையாக கலைஞர்தான் மீண்டும் முதல்வராக வரப் போவதைப்பற்றி ஏதோ குளிர்சாதன அறையில் உட்கார்ந்துகொண்டு எழுதுகிறவன் முடிவு பண்ணுகிற விசயமல்ல.

குடிசை வீட்டிலிருந்து கான்கிரீட் வீட்டிற்கு மாறியிருக்கிறார்களே ஏழை, எளிய கிராமப்புற மக்கள் அந்த மக்கள்தான் நிர்ணயிக்கப் போகிற வர்கள். ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு போடப்படும் என்று அறிவித்தார் கலைஞர்.

இதெல்லாம் நடக்குமா? ஏதோ கொஞ்ச நாளைக்குப் போடுவார்கள். அவர்களால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது. நிறுத்திவிடு வார்கள் என்று சொன்னார்கள். ஆனால், கலைஞர் அவர்களோ, ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்பதை மேலும் குறைத்து ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை இன்றைக்கும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கிக் கொண்டு வருகின்றார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சிந்திக்கிறார்

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட மக்களின் நல்வாழ்விற்காக நாள்தோறும் சிந்தித்துப் பணியாற்றிக் கொண்டு வருகின்றார். ஒரு பக்கம் சமூகப் புரட்சியை செய்துகொண்டு வருகின்றார். இன்னொரு பக்கம் பொருளாதார வளர்ச்சியை செய்து கொண்டு வருகின்றார் என்று கூறினார். திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முன்பு இந்த சமுதாயத்தின் நிலை எப்படியிருந்தது?

நாடகம் பார்க்க உரிமை இல்லை

இந்த வட சென்னையில் சொல்லுவதுதான் பொருத்தமானதாக இருக்கும். இது 1899 ஆம் ஆண்டு போடப்பட்ட நோட்டீஸ். வடசென்னை யானை கவுனி பகுதியில் லட்சுமி விலாஸ் நாடக சபை சார்பில் அபிராம சுந்தரி நாடகம். இந்த நாடகத்தை ஏன் பார்க்க வர வேண்டும்? இந்த நாடகத்தில் உள்ள கதையின் முக்கிய பகுதி என்ன என்பதை போட்டுவிட்டு நாடகம் பார்ப்பதற்குரிய கட்டணம் சோபா ஒரு ரூபாய். சேர் 12 அணா. இன்டர்மீடியட் சேர் 8அணா. காலரி 4 அணா. புருஷாளுக்குப் பாய் 4 அணா ஸ்திரீகளுக்கு ஜமக்காளம் 3 அணா என்று இப்படி கட்டணங் களைப் போட்டுவிட்டு கடைசியாக குறிப்பு என்று இந்த நோட்டீசில் போட்டிருக்கிறார்கள்.

பஞ்சமர்களுக்கு நாடகம் பார்க்க அனுமதி இல்லை என்று போட்டிருக்கிறார்கள். நாடகம் பார்க்க என்ன ஜாதி சர்டிபிகேட்டுடன் தான் வர வேண்டுமா? இன்றைக்கு யாராவது அந்த மாதிரி சொன்னால் புழல் சிறையில்தான் அடைக்கப் படுவார்கள்.

நூறு வருடத்திற்கு முன்பு இருந்த நிலை மாறியிருக்கிறதே இதற்கு யார் காரணம்? வருடா வருடம் ஆயுத பூஜைகள் வந்ததினால் ஏற்பட்ட மாறுதலா? அல்லது வருடா வருடம் தீபாவளி வந்ததினால் ஏற்பட்ட மாறுதலா?

திராவிடர் இயக்கத்தின்

அபாரத் தொண்டு திராவிடர் இயக்கத்தின் அபாரமான தொண்டு உலகத்திலேயே இப்படி ஒரு மனித நேய இயக்கத்தைக் காண முடியாது. மேலை நாடுக ளிலே ஆயுதம் ஏந்தி புரட்சி செய்திருக்கிறார்கள். ஆனால் ஒரு துளி இரத்தம் கூட சிந்தாமல் இந்த நாட்டிலே மாபெரும் சமுதாயப் புரட்சியை செய்தவர் தந்தை பெரியார்.

கலைஞர் செய்த காரியம்

முதல்வர் கலைஞர் அவர்களுக்கு ராமகோபாலன் கீதை புத்தகத்தைக் கொடுக்க வருவதாக தகவல் வந்தது. அவர் வரட்டும் யாரும் தடுக்காதீர்கள் என்று கலைஞர் சொல்லிவிட்டார். உடனே அண்ணா அறிவாலயத்தில் இருந்து நான் எழுதிய கீதையின் மறுபக்கம் நூலை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வாங்கி வைத்துக் கொண்டார். ராமகோபாலன் வந்து கலைஞரை சந்தித்தார். இந்த நூலை உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று வந்தேன். இந்த நூலை நீங்கள் படிக்க வேண்டும் என்று சொன்னார். அதை வாங்கிக் கொண்டு நன்றி சொல்லிவிட்டு இந்த நூலை வீரமணி எழுதியிருக்கின்றார் இதை நீங்கள் படிக்க வேண்டும் என்று ராமகோபாலனிடம் கொடுத்தார். அவர் அதிர்ச்சியோடு வாங்கிக் கொண்டார். இந்த செய்தியை கலைஞர் அவர்கள் தான் எனக்கு உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொன்னார். பிறகு நண்பர்களும் நடந்த சம்பவத்தை எனக்குச் சொன்னார்கள். அந்த அளவுக்கு வேகமான, விவேகமான சிந்தனையாளர் கலைஞர் அவர்கள்.

அவமானங்களைப் பெற்றதால் பிறந்த இயக்கம்

எனவே அவமானங்களைப் பெற்றதால் திராவிட இயக்கம் பிறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனிதனுடைய காலிலே போடப்பட்ட பொரு ளாதார விலங்கு கண்ணுக்குத் தெரியும் மனிதனு டைய கைகளிலே போடப்பட்ட அரசியல் விலங்கு கண்ணுக்குப் பளிச்சென்று தெரியும். ஆனால் மூளையிலே போடப்பட்ட அடிமை விலங்கு அவ்வளவு சுலபமாக கண்ணுக்குத் தெரியாது.

திராவிட இயக்கம் ஏன் பிறந்தது?

அதன் வேலை முடிந்ததா?

அதன் வேலை தொடர வேண்டுமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒருவர் ஒரு ரூபாய்க்கு லாட்டரி டிக்கெட் வாங்கி அவனுக்குப் பரிசு விழுந்தால் லட்சாதிபதி ஆகிவிடாலம். ஆனால் ஒருவனுக்குள்ள ஜாதி அவன் இறந்துவிட்டால் சுடுகாட்டுக்குச் சென்று அவனை எரித்த பிறகும் அவன் சாம்பலாகிறானே தவிர, ஜாதி சாவதில்லை. இராணுவ அமைச்சராக இருந்த ஜெகஜீவன்ராம் அவர்கள் முன்னாள் முதல்வர் சம்பூர்ணானந்த் சிலையை உத்தரப்பிரதேசத்தில் திறக்கச் சென்ற பொழுது அங்குள்ள உயர் ஜாதி மாணவர்கள் இவரை அவமானப்படுத்தி அனுப்பினார்கள்.

பாபுஜெகன்ஜீவன்ராம் குமுறினார்

தாழ்ந்த ஜாதிக்காரன் நீ அமைச்சராகி விட்டால் எங்களுடைய ஷூக்களுக்கெல்லாம் யார் பாலிஷ் போடுவது என்று அவமானப்படுத்தி அனுப்பினர். சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தான் தந்தை பெரியார் பிறந்த மண் என்று சொல்லி அவருடைய மனக் குமுறலைக் கொட்டினார்.

அதனால்தான் கலைஞர் அவர்கள் இருநூறுக்கும் மேற்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரங்களைத் திறந்து வைத்தார். அது மட்டுமல்ல, இந்த நாடே சமத்துவபுரமாக ஆக வேண்டும் என்பதற்காகத்தான் ஆட்சி நடத்திக் கொண்டு வருகின்றார்.

தியாகராயரும், டி.எம்.நாயரும்

சர்.பிட்டி.தியாகராயர் காங்கிரஸ்காரர். பெரிய பக்திமான். டி.எம்.நாயர் நாத்திகவாதி. இரண்டு பேரும் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நின்றபொழுது பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து இருவரையும் தோற்கடித்தார்கள். இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் இருவருமே எலியும் பூனையும் போல இருந்தவர்கள். இவரும் கீரியும், பாம்பும் போல இருந்தவர்கள்.

சர்.பிட்டி.தியாகராயர் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் பெரிய தொகையை நன்கொடையாக வழங்கினார்.

கும்பாபிஷேக விழாவிற்கு இவர் சென்றார். பார்ப்பனர்கள், இவரை கும்பாபிஷேக மேடையில் ஏற்றுவார்கள் என்று சர்.பிட்டி.தியாகராயர் நினைத்தார். இவரைப் பார்ப்பனர்கள் ஏற்றவில்லை. இவரிடம் கணக்குப் பிள்ளையாக இருந்த பார்ப்பனரை மற்ற பார்ப்பனர்கள் கும்பாபிஷேக மேடையில் ஏற்றினார்கள்.

இந்த அவமானத்தை பார்ப்பனர்களின் ஆணவத்தை உணர்ந்த தியாகராயர் உடனே காரை எடு என்று சொல்லி டி.எம்.மாதவன் நாயர் வீட்டிற்குச் சென்றார். இவர் எதற்கு இங்கு வந்திருக்கிறார் என்று அவருக்குப் புரியவில்லை.

டி.எம்.நாயரைக் கண்டவுடன் கட்டிப்பிடித்துக் கொண்டார் சர்.பிட்டி.தியாகராயர். திராவிடர் இயக்கம் தோன்றுவதற்கு இவைதான் காரணங்கள்.

நாயரின் ஸ்பர்டாங் ரோடு பேச்சு

டாக்டர் டி.எம்.நாயர் 1917ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் நாள் சென்னை ஸ்பர்டாங் சாலைப்பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு நிகழ்த்தினார். சேத்துப்பட்டிற்கு அருகில்தான் இருக்கிறது ஸ்பர்ட்டாங் ரோடு.

டாக்டர் டி.எம்.நாயர் ஆற்றிய சொற்பொழிவில் அரிய செய்தி ஒன்றைச் சொல்லுகின்றார். இந்த நாட்டில் இரு இனங்கள் உண்டு. ஒன்று இந்நாட்டின் சொந்தக்காரர்கள் இனமான நம் திராவிடர் இனம், மற்றொன்று, நாம் அசட்டையாய்த் தூங்கிக் கொண்டிருக்கும் போது, வீட்டிற்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற ஆரியர் இனம்! (நீங்கள் கை தட்டியது போல்தான் அன்றைக்கும் கூட்டத்தினர் வெட்கம், வெட்கம், ளுயஅந, ளுயஅந என்று ஆரவாரித்துக் கைதட்டினர்)

இத்தகைய இழிதகைமை கொண்ட ஆரிய இனம், நாட்டின் இந்தப் பகுதிகளில் திருட்டுத் தனமாக நுழைவதற்கு என்றே, அவர்களுடைய கடவுள்களால் இயற்கையாகவே, ஏற்படுத்தப்பட்டு விட்டதோ என்று எண்ண வேண்டிருக்கிறது. வட இந்திய மலைப் பகுதிகளான இமயமலை, இந்துகுஷ்மலை ஆகியவற்றின் இடையிடையே உள்ள கைபர் கணவாய், போலன் கணவாய் முதலிய கணவாய்களின் வழியாகத் தாங்கள் ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு சாரை சாரையாக உள்நுழைந்து, வழி நெடுக, மேய்த்துக்கொண்டே வந்து ஆங் காங்குப் பரவி முகாம் அடித்துக்கொண்ட வர்கள்தாம், இந்த ஆரியப் பரதேசிகள் (கைதட்டல்! ஆரவாரம்!) என்று பேசியிருக்கின்றார். சமுதாய ஏற்றத்தாழ்வு, நிலையை மாற்றத்தான் திராவிட இயக்கம் பிறந்தது.

2011இல் மீண்டும் கலைஞர் ஆட்சி

1917இல் டாக்டர் டி.எம்.நாயர் சொன்ன செய்தியை நடைமுறைப்படுத்தியவர் நமது கலைஞர் அவர்கள். அதனால்தான் அனைத்து ஜாதியி னரையும் அர்ச்சகராக்க சட்டம் இயற்றினார்.

எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்க வேண்டுமென்று பாடுபடுகின்ற இயக்கம்தான் திராவிட இயக்கம். 2011ஆம் ஆண்டு திராவிட இயக்க ஆட்சி கலைஞர் ஆட்சி-மலர்வது உறுதி. ஆறாவது முறையாகவும் முதலமைச்சர் கலைஞர்தான் இந்த நாட்டை ஆளப்போகின்றார். -இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார்.

தி.மு.க. இலக்கிய அணி நிகழ்ச்சி

வடசென்னை மாவட்ட தி.மு.க இலக்கிய அணியின் சார்பில் திராவிட இயக்க வரலாறு எனும் தலைப்பில் 1.11.2010 அன்று திங்கள்கிழமை இரவு 7.30 மணிக்கு சென்னை ராயபுரம் அறிவகத்தில் மிகச்சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழர் தலைவரை வாயிற்படியிலேயே நின்று பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். அடுத்து நிகழ்ச்சி தொடங்கியது. வடசென்னை மாவட்ட தி.மு.க இலக்கிய அணி செயலாளர் பி.டி.பாண்டிச்செல்வம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

அடுத்து வடசென்னை மாவட்ட தி.மு.க செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு தொடக்கவுரையாற்றினார். தொடர்ந்து வட சென்னை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் திராவிடர் இயக்க வரலாற்றை எடுத்துக் கூறினார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திராவிட இயக்க வரலாற்றை விளக்கிப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இரா.மதிவாணன், கட்பீஸ் அ.பழனி, டன்லப் ரவி, அ.மணிவேலன், வி.எஸ்.ரவி, ஆர்.டி.சேகர், செ.தமிழ்வேந்தன், டி.வி.சதீஷ்குமார், தா.இளைய அருணா ஆகியோரும் மற்றும் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி தலைவர் செ.வை.ர.சிகாமணி, வடசென்னை மாவட்ட தலைவர் கொடுங்கையூர் தங்கமணி, மாவட்டச் செயலாளர், தி.வேசு.திருவள்ளுவர், கடலார் வேலாயுதம் மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment