கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, November 26, 2010

2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை பத்திரிகைகள், ஊடகங்களின் போக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்!


2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குத் தொடர்பாக பத்திரி கைகள், மின்னணு ஊடகங்கள் தவறான தகவல் களை வெளியிட்டு வரு கின்றன என்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் கண் டித்தனர்.


ஊடகங்களின் தலையில் நீதிபதிகள் குட்டு

2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.வி. சிங், ஏ.கே. கங்குலி இந்த வழக்கில் பிரதமரின் பெயரை ஊடகங்கள் தேவையில் லாமல் பெரிதுபடுத்தி விட்டன என்று குறை கூறினார்கள். பத்திரிகை சுதந்திரத்தை நீதிமன்றம் மதிக்கிறது. சமுதாயத் துக்குச் சேவையாற்றுவ தில் பத்திரிகை, மின்னணு ஊடகங்கள் பெரும்பங்கு வகிப்பதை யாரும் மறுக்க முடியாது. எனினும், நீதி மன்ற நடவடிக்கைகளில் தவறான தகவல்கள் வெளி யாவது வருத்தமளிக் கிறது என்றனர்.

ஸ்பெக்ட்ரம் வழக் கில் பத்திரிகைகள், மின்னணு ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளன. சில பத் திரிகைகள் அரசை அறைந்தது உச்சநீதிமன் றம் என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள் ளது. அறைந்தது என்பதற்கு என்ன அர்த்தம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


ஊடகங்கள் தண்டிப்பதா?

நீதிமன்ற நடவடிக் கைகளைத் திரித்து ஊட கங்கள் வெளியிட்டது பற்றிய தங்களது அதி ருப்தியைத் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி களின் கருத்தை ஒட்டி நேற்று உச்ச நீதிமன் றத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆ.இராசா வின் வழக்கறிஞர், தவறு செய்யாத அப்பா வியான எனது கட்சிக் காரர் ஏற்கெனவே ஊட கங்களால் தண்டிக்கப் பட்டு விட்டார் எனக் கூறினார்.

உயர் தணிக்கை அதி காரியின் அறிக்கையில் இராசா மீது குற்றம் சுமத்தப்படவில்லை. ஆனால் அதற்கு முன்பே அவர் ஊடகங்களால் தண்டிக்கப்பட்டுவிட்டார். ஆ.இராசாதான் பொறுப்பு என்றோ அல்லது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அவர் பணம் பெற்றார் என்றோ கூறும் ஒரே ஒரு பகுதியையாவது தணிக்கை அறிக்கையில் இருப்பதாகக் காட்ட முடியுமா? என்று வாதாடிய வழக்கறிஞர் அந்தியார்ஜுனா, மனுதாரரின் வழக்கு ரைஞர் பிரசாந்த் பூஷ னுக்கு சவால் விட்டார்.

அந்தியார்ஜுனா மேலும் கூறினார்: ரூ 1,76,000 கோடி இழப் புக்கு ஆ.இராசாதான் பொறுப்பாளி என்று கூறும் ஒரே ஒரு வார்த்தை கூட தணிக்கை அறிக்கையில் இல்லை. அவரது தரப்பு வாதத்தைக் கேட்டு அறிந்து கொள்ளாமலேயே அவரைத் தூக்கிலிடாதீர்கள்.

நடைமுறை என்ன?

தொலைத் தொடர் புத் துறைக்காக ஆஜ ரான வழக்குரைஞர் சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்பிரமணி யம் கூறியதாவது: நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் விதி 308 இன் கீழ், இந்தியத் தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை பொதுக் கணக்குக் குழுவுக்கு அனுப்பப்பட வேண் டும் என்றும், அக் குழு அந்த அறிக்கையைப் பரிசீலித்து, அந்த அறிக் கையின் அடிப்படையில் விசாரணை செய்ய சாட்சிகளை அழைப் பது எனும் வழக்கமாகப் பின்பற்றப்படும் நட வடிக்கை ஒன்று உள் ளது என்றார்.

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது? தணிக்கை அறிக்கையில் ஆ.இராசா மீது குறிப் பாக எந்தவிதக் குற்றச் சாற்றும் கூறப்படாத நிலையில், அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்படும் முன்பே, ஊடகங்கள் இராசாமீது வீண் பழி சுத்தி அவரை ஒரு பயங் கரமான ஊழல் புரிந்த வரைப்போல் சித்திரித்து விட்டன.

தணிக்கை அறிக்கை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிற்கு அனுப்பி அதன் மீது அக் குழுதான் நடவடிக்கை எடுக்கும் என்ற சட்டப் படியான நடைமுறை இருக்கும் நிலையில், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை என்று அடம் பிடித்து எதிர்க்கட்சிகள் நாடா ளுமன்றச் செயல்பாட் டையே காலவரையின்றி முடக்குவது என்ன நியாயம்?
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என் பார்கள். பத்திரிகைக் காரர்களின் புளுகுகள் அதற்குள்ளேயே அம் பலமாகி விட்டன.

No comments:

Post a Comment