கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, February 1, 2012

புதிய காப்பீட்டு திட்டத்தை வரவேற்கிறேன்! தி.மு.க. அரசு கொண்டுவந்த மற்ற திட்டங்களையும் ஏற்க வேண்டும் : தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை


புதிய காப்பீட்டு திட்டத்தை வரவேற்கிறேன், அதே போல தி.மு.க. அரசு கொண்டுவந்த மற்ற திட்டங்களையும் ஏற்க வேண்டும் என்று கலைஞர் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட் டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நேரத்தில் எல்லாம் புதிய புதிய திட்டங்களை அறிவித்து நடைமுறைப் படுத்தியது மட்டுமின்றி கழகம் ஆட்சிப் பொறுப் பிலே இல்லாத காலங் களில் தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நிறை வேற்றிய நல்ல திட்டங் களையும் வரவேற்று, யார் ஆட்சிக் காலத்தில் அந்தத் திட்டம் தொடங் கப்பட்டது என்றெல் லாம் எண்ணிடாமல், அந்தத் திட்டத்தினால் பயனடைவோரின் நலன் களை எண்ணிப் பார்த்து, அந்தத் திட்டங்களையும் செம்மையாகவும் சிறப் பாகவும் நடத்திடுவதற் கான முனைப்பிலே ஈடு பட்டது.
குறிப்பாக ஒன்றைக் கூறவேண்டுமானால்
குறிப்பாக ஒன்றைக் கூறவேண்டுமேயானால், எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் - தி.மு.க. ஆட் சியிலே தொடங்கப் பட்ட திட்டமல்ல. எனினும் அந்தத் திட் டத்தை அ.தி.மு.க. ஆட் சியைவிட தி.மு.க. ஆட்சி தான் தீவிரமாகச் செயல் படுத்தியது. அ.தி.மு.க. ஆட்சியில் தொகுப்பூதி யத்தில் பணியாற்றி வந்த சத்துணவு சமையலர்கள், உதவியாளர்கள், அங்கன் வாடி உதவியாளர்கள் ஆகிய அனைவருமே தி.மு.க. ஆட்சியிலே தான் சிறப்பு ஊதிய விகிதம் பெற்றார்கள். சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் அகவிலைப்படி தவிர ஏனைய படிகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியி லேதான், அவர்களுக்கு முதல் முறையாக 1-6-2009 முதல் மாதந்தோ றும் வீட்டு வாடகைப் படி, நகர ஈட்டுப்படி ஆகியவைகளும், 100 ரூபாய் மருத்துவப்படி யும், 2000 ரூபாய் பண் டிகைக் கால முன்பண மும் வழங்கப்பட்டது.
எனவே தி.மு.க. ஆட்சிக் காலத்தில், திட் டங்களின் பயன்கள் தான் கருதப்பட்டதே தவிர, அந்தத் திட்டம் யார் காலத்தில் தொடங் கப்பட்டது என்றெல் லாம் கருதியதில்லை. ஆனால் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதற்காக ஓமந்தூ ரார் வளாகத்திலே உள்ள தலைமைச் செய லகக் கட்டடம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத் தாண்டு நாள், செம் மொழித் தமிழாய்வு பாவேந்தர் நூலகம் போன்றவைகளை இன்றைய ஆட்சியாளர் கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அறி வித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் குடிசை வீடுகளே இருக்கக் கூடாது என்ற உயரிய குறிக்கோளோடு கழக ஆட்சியில் தொடங்கப் பட்ட திட்டத்தை அ.தி. மு.க. அரசு மூடிவிட்ட போதிலும், அந்தத் திட் டத்திற்குப் பதிலாக வேறொரு பசுமை வீடு வழங்கும் திட்டத்தைத் தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
மூடிவிட்டார்களே- எனக்கு வருத்தமில்லை
அதைப்போலவே கழக ஆட்சியில் தொடங் கப்பட்ட உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை மூடி விட்டு, அதற்குப் பதிலாக மருத் துவக் காப்பீட்டுத் திட் டத்தைத் தொடங்கியி ருக்கிறார்கள். அதைப் பொறுத்தவரையில் நான் தொடங்கிய திட் டத்தை மூடிவிட்டார்களே என்றுஎனக்கு வருத்தமில்லை. எந்தப் பெயரிலோ; எப்படியோ திட்டம் நடைபெற்று மக்கள் பயன்பெற்றால் போதுமென்றுதான் எண்ணுகிறேன், விரும்புகிறேன்.
தி.மு.க. அரசால் தொடங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 642 வகை யான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அனு மதி அளிக்கப்பட்ட தற்கு மாறாக, தற்போது 1016 வகையான நோய் களுக்கு சிகிச்சை அளிக் கப் போகிறார்கள் என் றால், அதிலே எனக்கு மகிழ்ச்சிதான். ஏற்கனவே இருந்த காப்பீட்டுத் திட் டத்தின்கீழ் பயனாளி களாக இருந்து பழைய அட்டைகளை வைத்தி ருப்பவர்களும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்றும் - ஏற்கெனவே கழக ஆட்சி யில் ஒரு குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவி என்றால், தற்போது ஒரு குடும்பத்துக்கு 4 ஆண்டு களுக்கு ரூ.4 லட்சம் உதவி என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தற்காக இந்தத் திட் டத்தை வரவேற்கிறேன்.
ஆட்சி வரலாம்- போகலாம் ஆனால்...!
தி.மு.க. அரசு கொண்டு வந்த மற்ற திட்டங்களை யும் பகைமை நோக் கோடு பார்க்காமல், அந்தத் திட்டங்களை யெல்லாம் நான் என்னு டைய சொந்தப் பணத்தி லிருந்தோ, கழகத்தின் பணத்திலிருந்தோ நிறைவேற்றியது அல்ல, அதுவும் அரசின் பணம் தான் என்பதை மனதிலே கொண்டு, சற்று பரந்த நோக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டு மென்று எதிர்பார்க்கி றேன். அனைத்துமே அரசின் திட்டங்கள் தான். எந்தத் திட்டத் தையும் தி.மு.க. அரசின் திட்டம் என்றோ, அ.தி. மு.க. அரசின் திட்டம் என்றோ தனித்துப் பார்ப் பது நல்லதல்ல.
உதாரணத்திற்காகச் சொல்ல வேண்டுமே யானால், தலைமைச் செயலகம் ஒன்று புதி தாகக் கட்டப்பட வேண் டும் என்று ஜெயலலி தாவே பேரவையிலேயே ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கிறார். அந்த எண்ணம் தி.மு.க. ஆட்சியிலே நிறைவேற் றப்பட்டு விட்டது என்ப தற்காக, அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தால் அதனால் யாருக்கு நஷ் டம்? அந்தத் தலைமைச் செயலகத்திலே பணி யாற்றுகின்ற அதிகாரி களும், அலுவலர்களும் இடப்பற்றாக்குறை காரணமாக எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகி றார்கள் தெரியுமா?
ஆட்சி இன்று வர லாம், அடுத்த தேர்தலில் வராமல் போகலாம், மீண்டும் வரலாம். ஆனால் ஆட்சியிலே இருக்கின்ற நேரத்தில் - எதிர்க்கட் சியைப் பற்றியே குறுகிய நோக்கில் எண்ணிச் செயல்படாமல், மக்க ளின் நல் வாழ்க்கைக் காக நமது நேரத்தைச் செலவிடுவதுதான் சிறந்த ஜனநாயகம் என்பதை ஜெயலலிதா இனியாவது புரிந்து கொண்டு, கொஞ்சம் பெருந் தன்மையோடு செயல் பட வேண்டுமென்று விரும்புகிறேன், செயல் படுவார் என்று நம்பு கிறேன். பார்க்கலாம்
இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

No comments:

Post a Comment