கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, September 10, 2011

பழி வாங்கும் செயல்களுக்காக அதிமுக அரசு மன்னிப்பு கேட்கும் நிலை வரும் - கலைஞர்


நெருக்கடி நிலைக்காக இந்திரா காந்தி வருத்தம் தெரிவித்ததுபோல, பழி வாங்கும் செயல்களுக்காக அதிமுக அரசு மன்னிப்பு கேட்கும் நிலை வரும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
திமுக தலைமைக் கழக துணை மேலாளர் ஜெயகுமார் மகன் கதிரவன்& காயத்ரி திருமணம், அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் 08.08.2011 அன்று காலையில் நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி கருணாநிதி பேசியதாவது:
நெருக்கடி நிலைக்குக் காரணமான, இந்தியாவின் தலைசிறந்த தலைவியாக விளங்கிய இந்திரா காந்தியாலேயே திமுகவை வீழ்த்த முடியவில்லை. அவரே வருத்தம் தெரிவிக்கின்ற நிலைமைக்கு திராவிட மக்கள், தமிழ் மக்கள் திமுகவை அன்றைக்குத் தாங்கிப் பிடித்தார்கள் என்பதை வரலாறு உணரும். அந்த வரலாறு மீண்டும் திரும்புவதற்கு இன்றைக்கிருக்கின்ற ஆட்சியாளர்கள் வழி வகுப்பார்களேயானால், அதற்காக முன்கூட்டியே நன்றி கூறுவதற்கு தயாராக இருக்கிறோம்.
அண்ணா, தமிழக சட்டமன்றத்திலே ஜனநாயகம் எப்படி பூத்துக் குலுங்க வேண்டுமென்பதை பற்றி பல நேரங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார். இன்றைக்கு அந்த ஜனநாயகத்தை காண முடிகிறதா என்றால் இல்லை. ஜனநாயகம் தேடப்பட வேண்டிய ஒரு பொருளாக ஆகி விட்டது. அதனால்தான் திமுகவினர் நேற்றைக்கு கூட வெளியேறி விட்டார்கள்.
வெளியேறியவர்களை நிருபர்கள், என்ன திருக்குறள் படித்து முடித்தவுடன் வெளியேறி விட்டீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு இவர்கள், �நல்ல சொற்களைக் கேட்டு முடித்து விட்டோம். தீயச் சொற்களைக் கேட்க நாங்கள் தயாராக இல்லை� என்று சொல்லியிருக்கிறார்கள். திருக்குறள் ஒன்றைத் தவிர காதால் கேட்கக் கூடிய எந்தவொரு சொல்லும் ஒலிக்கவில்லை என்பதற்கு, இதை விட வேறு சான்று சொல்ல விரும்பவில்லை.
திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது எந்த அளவுக்கு கண்ணியமாக, எதிர்க்கட்சிகளை மதிக்கின்ற வகையில் நடந்து கொண்டது, இப்போது எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒருவர் பேசியிருக்கிறார், பெரிய மேதாவி. இவருக்குத் தான் கதை சொல்லத் தெரியும் என்று மண்வெட்டி கதை சொல்லியிருக்கிறார். ஒரு விவசாயி கடவுளைப் பார்த்து கேட்டாராம். நான் விவசாயம் செய்ய வேண்டும், கடவுளே எனக்கு ஏதாவது உதவி செய்� என்று கேட்டாராம். விவசாயம் செய்ய வேண்டுமென்றால், கடவுள் என்ன செய்ய வேண்டும்?
விவசாயிகளுக்கு ஸீ7000 கோடி கடன் இருந்தால், அதை ரத்து செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, கடவுள், �இந்தா ஒரு மண்வெட்டியை வைத்துக் கொள்� என்று ஒரு இரும்பு மண்வெட்டியைக் கொடுத்தாராம். விவசாயி அந்த இரும்பு மண்வெட்டியை வாங்கி வெட்டினாராம். மண்வெட்டி என்றாலே அது மண்ணை வெட்டுவதுதான். ஆனால், அந்தக் கதையிலே வருகின்ற கடவுள், கடவுள் கதையிலேதான் வருவார். வேறு எதிலும் வர மாட்டார். அந்த கடவுள் கொடுத்தது இரும்பு மண் வெட்டியாம். இரும்பால் ஆனதைக் கொடுத்தால், அது இரும்பு வெட்டி தானே, அது மண் வெட்டி ஆகாது. மண்ணை வெட்டினால்தான் மண் வெட்டி.
தமிழ் தெரிந்தவர்களுக்கு இதெல்லாம் தெரியும். தமிழ் தெரியாதவர்கள் சிலர் சட்டசபையில் இருக்கிற காரணத்தால் அவர்களுக்குப் புரியவில்லை. விவசாயி வெட்டினானாம். இரும்பு மண்வெட்டியால், வெட்டியவுடன் இரும்பாகவே வந்ததாம். உடனே அவன் மகிழ்ச்சியடைந்து கடவுளிடம் எனக்கு வேறொரு மண்வெட்டி கொடு என்று கேட்டானாம். உடனே கடவுள் வெள்ளி மண்வெட்டி கொடுத்தாராம். அதை வாங்கி விவசாயி வெட்டினானாம்.
நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எங்கேயாவது வெள்ளியால் மண்வெட்டி செய்து மண்ணை வெட்டுகின்ற மடையன் இருப்பானா? வெள்ளியால் மண்வெட்டி கிடைத்தால் வெள்ளியைதான் வெட்டுவான். இவன் வெள்ளி மண்வெட்டியால், மண்ணை வெட்டினானாம். அது வெள்ளியாக கொடுத்ததாம்.
மீண்டும் கடவுளிடம் அவன் பேராசைப்பட்டு கேட்டதால் தங்க மண்வெட்டி கொடுத்தாராம். இவன் தங்க மண் வெட்டியை வைத்துக் கொண்டு, தங்கம் கிடைக்குமென்று தோண்டிக் கொண்டே போய் தரைக்குள்ளேயே மூழ்கி விட்டானாம். அது யாராம்? அது தி.மு.க வாம்.
திமுக தங்க மண்வெட்டியாக ஆக்கப்பட்டு, குழி தோண்டி, அந்தக் குழிக்குள் விழுந்து புதைந்து போனதாக கதை சொல்ல வந்தவர், கதையைச் சொல்லி முடித்திருக்கிறார். தங்க மண்வெட்டி தேடியவர்கள் யார்? முதலில் இரண்டு கோடி ரூபாய் சொத்து இருந்தபோது, அது போதாதென்று, அதைப் பத்து கோடி ரூபாய் சொத்தாக ஆக்கி, பிறகு அந்தப் பத்து கோடி சொத்தும் போதாது என்று, அதை 66 கோடி ரூபாய் சொத்தாக ஆக்கி, இன்றைக்கு பெங்களூரு கோர்ட்டில் போய் தொங்கிக் கொண்டிருப்பது யார்? தங்க மண்வெட்டியா? இரும்பு மண்வெட்டியா? வெள்ளி மண்வெட்டியா? கதை சொல்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். சட்டசபையிலே பேசினால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், ஏனென்றால் திமுக தலைவர்கள் எல்லாம் வெளியே இருக்கிறார்கள் ஏதோ அரசியலுக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அல்ல இது. பெரியாரால், அண்ணாவால் நம் இனத்தைக் காப்பாற்றுவதற்காக இன உணர்வை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். இன உணர்வு என்றைக்கு பட்டுப் போகிறதோ அன்றைக்கெல்லாம் திமுக, அந்த இன உணர்வை கூர் தீட்டப் பாடுபடும், பணியாற்றும்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உட்பட முக்கிய திமுக பிரமுகர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment