கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 8, 2011

அதிமுக அரசின் பழி வாங்கும் போக்கு : ஜனாதிபதியிடம் திமுக எம்.பி.க்கள் கோரிக்கை மனு


திமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு பழி வாங்கும் அதிமுக அரசின் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் 06.09.2011 அன்று மனு அளித்தனர்.
திமுக எம்.பி.க்கள் நேற்று டெல்லியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்துப் பேசினர். அப்போது அதிமுக அரசின் பழி வாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு தந்தனர்.
மனுவில் திமுக எம்.பி.க்கள் கூறியிருப்பதாவது:

2006 முதல் 2011 வரையில் ஆவணங்களில் முறைகேடு செய்து நிலங்களின் உண்மையான உரிமையாளர்களிடமிருந்து நிலங்களை அபக ரித்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அந்த நிலங்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று ஜெயலலிதா தலைமையிலான மாநில அ.தி.மு.க. நிர்வாகம் பொது அறிவிப்பு செய்தது.
மேற்கூறிய அறிவிப்பு தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளைத் தொடுத்து பொது மக்கள் பார்வையில் கட்சியின் நற்பெயரை அழிக்கவும் செய்யப்பட்ட ஒரு சால்ஜாப்புதான் என்பதை நாங்கள் இன்று உணருகிறோம்.
பெரும்பாலான புகார்கள் விற்பனைத் தொகை போதுமானதல்ல என்றும், எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்களுக்கு எதிராகவும் இருந்தன. அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. போன்ற பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளுக்கு எதிராகவும் புகார்கள் இருந்தன. நில அபகரிப்பு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தற்போதுள்ள மாநில காவல்துறையினர் எண்ணிக்கையிலிருந்து சிறப்பு காவல்துறை பிரிவை அரசு அமைத்துள்ளது.
தி.மு.க.வினருக்கு எதிரான புகார்களுக்கு முக்கிய முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிராக உள்நோக்கத்துடன் கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாநில அரசு காவல் துறைக்கு ரகசிய கட்டளை பிறப்பித் துள்ளது.
இதுவரை, நில அபகரிப்பு புகார்களில் நடவடிக்கை எடுப்பது என்ற பெயரில் 90 தி.மு.க. நிர்வாகிகள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சராக இருந்தவரும், சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம், 10 ஆண்டுகளுக்கு மேலாக அமைச்சராக இருந்தவரும் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், வரலாற்று துறையில் பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்று 18 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட க.பொன்முடி,
10 ஆண்டுகளுக்கு மேல் அமைச்சராக இருந்தவரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு, முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாவட்ட செயலாளருமான என்.கே.கே.பி.ராஜா, முன்னாள் அமைச்சரும், கோவை மாவட்ட தி.மு.க. செயலாளருமான பொங்கலூர் பழனிசாமி மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மீது நிலஅபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டு அவர் இடைக் கால முன்ஜாமீன் பெற்றுள்ளார். முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இதில் அடங்குவர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான மணி (பொங்கலூர்), அன்பில் பெரியசாமி (திருச்சி&2), ரங்கநாதன் (வில்லிவாக்கம்) தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் (சேப்பாக்கம்) தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஜெ.அன்பழகன், லால்குடி தொகுதி எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன் ஆகியோரும் உள்ளனர்.
வழக்கமான குற்றவாளிகள், ரவுடிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்புக் காவல் சட்டமான குண்டர்கள் சட்டம் தி.மு.க.வின் 11 நிர்வாகிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளன.
தி.மு.க. மீது காவல்துறை பாரபட்சமான முன் விரோத அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது. சட்டத்தின் ஆட்சியினுடைய பல கோட்பாடுகள் காற்றில் பறக்கவிடப்பட்டு மாநிலத்தில் ஒரு போலீஸ் ராஜ்யம் நடைபெறுகிறது. தி.மு.க. நிர்வாகிகள் பொய்யாக, புனையப்பட்ட புகார்களில் கைது செய்யப்படுகின்றனர்.
பலர் இத்தகைய பொய் புகார்கள் இல்லாமல்கூட கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்பட்டு புகார்கள் புனையப்படுகின்றன. இது மனித உரிமை மீறலும், பிரபலமான டி.கே.பாசு மேற்குவங்க மாநில அரசு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட கைது செய்யும் காவல்துறை அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய கடுமையான உத்தரவுகளுக்கு மாறானதுமாகும்.
சேடப்பட்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தளபதி, விசாரணைக்கு வந்த போது மேலும் குற்றச்சாட்டுகளை சுமத்தும் முற்றிலும் மாறுபட்ட புகாரின் அடிப் படையில் அவரும் இதர சில தி.மு.க. நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தளபதி ஜாமீன் மனு செய்தபோது, புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சிவில் தன்மையானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 18.9.2009ல் நடைபெற்றதாக கூறப்படும் கிரிமினல் மிரட்டல் சம்மந்தமாக 1.8.2011ல் கொடுக்கப்பட்ட புகாரில் அன்றே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். இதில் அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சொத்தின் உரிமை தாவா 2008ம் ஆண்டு சிவில் வழக்கில் இன்னமும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தி.மு.க. நிர்வாகிகள் முறையான கைது மெமோ இன்றி கைது செய்யப்பட்டு மாஜிஸ்ட்ரேட் முன்பு முறையான ஆவணங்களின்றி நிறுத்தப்படுகின்றனர். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எந்த கைது மெமோ, ரிமாண்ட் மெமோவும் இல்லாமல் கைது செய்யப்பட்ட முறையான ஆவ ணங்களின்றி நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டார்.
அதுபோலவே, முன் னாள் அமைச்சர் என்.கே. கே.பி.ராஜா எப்.ஐ.ஆர்.கூட இல்லாமல் சிறையில் வைக்க நிறுத்தப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்களிலும் காவல்துறையினரிடம் மாஜிஸ்ட்ரேட் கேள்வி கேட்ட பிறகுதான் இந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டன. எப்.ஐ.ஆரில் பெயர் இடம் பெறாதபோதும் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி கைது செய்யப்பட்டார். குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரின் புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரிடமிருந்து பொய்ப் புகார்களைப் பெற்று தி.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்படுகின்றனர். தலைமறைவாகி போலீசாரால் தேடப்படும் ஒரு குற்றவாளியிடமிருந்து பெறப்பட்ட புகாரில் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அருகாமையிலுள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் வழகாட்டும் நெறிமுறைகளுக்கு முற்றிலும் மாறாக கைது செய்யப்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் அவர்கள் எல்லையில் உள்ள சிறைகளில் இல்லாமல் வேண்டுமென்றே அவர்களது இல்லங்களிலிருந்து வெகுதொலைவிலுள்ள சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட மாற்றங்கள் காவல் உத்தரவை மீறி காவலில் வைக்க உத்தரவிடும் மாஜிஸ்திரேட்டுக்கு தெரிவிக்காமல் கூட பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்படுகின்றனர். மதுரை குற்றவியல் பிரிவு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட என்.சுரேஷ்பாபு, வி.கே.குருசாமி ஆகியோர் மதுரை மத்திய சிறைக்கு பதிலாக பாளையங்கோட்டை சிறையில் வைக்கப்பட்டனர்.
மதுரை காவல் துறையால் கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.கோபி மதுரை மத்திய சிறைக்கு பதிலாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருவாரூர் காவல் துறையால் கைது செய்யப்பட்ட கலைவாணன் திருச்சி மத்திய சிறைக்கு மாறாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் காவல் துறையால் கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மத்திய சிறைக்கு பதிலாக கோவை சிறையில் வைக்கப்பட்டார். திருச்சி காவல் துறையால் கைது செய்யப்பட்ட கே.என்.நேரு, அன்பில் பெரியசாமி ஆகியோர் திருச்சி சிறைக்கு பதிலாக கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்செந்தூர் காவல் துறையால் கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அருகி லுள்ள பாளையங்கோட்டை சிறைக்கு பதிலாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன் புழல் சிறைச்சாலைக்கு பதிலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த காஞ்சிபுரம், பவானி, சோழவந்தான், ஆண்டிபட்டி, நாகர்கோவில், காரைக்குடி ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி. என்.ஆர். கோவிந்தராஜன் ஆகியோர் மீதும், மேலும் பல அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும் நில அபகரிப்பு புகார்கள் அளிக்கப்பட்டும். சட்டப்படி காவல் துறை நடவடிக்கை எடுக்கத் தயங்கி, அவர்களுக்கு எதிரான புகார்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தற்போதைய அ.தி.மு.க. அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூர்த்தி என்பவரால் நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டபோது, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி சட்ட ரீதியான ஆலோசனையைப் பெற முயலுவதாகக் கூறினார். இதற்கிடையில் மற்றொரு மூத்த அமைச்சர் புகார்தாரரை அழைத்து சமரசம் செய்து வைத்தார்.
காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சோழன் பழனிச்சாமி மீதான நில அபகரிப்பு புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்காததால் புகார்தாரர் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்குச் சென்றுள்ளார்.
ஆனால் தற்போது அ.தி.மு.க. நிர்வாகிகளின் தூண்டுதலால் தொடுக்கப்படும் வழக்குகளின் புகாருக்கு கிரிமினல் வர்ணம் பூச சதி, அச்சுறுத்தல் மிரட்டுதல் போன்றவை சேர்க்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் மேற்கூறியபடிஉச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் ஆகியவற்றை மீறும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேவையான நடவடிக்கையை எடுக்க தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவில் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், மத்திய அமைச்சர்கள் பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன், திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட் டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

No comments:

Post a Comment