கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 9, 2011

தி.மு.க. நிர்வாகிகளுடன் கருணாநிதி அவசர ஆலோசனை: பிப். 3ல் பொதுக் குழு கூடுகிறது


சட்டப் பேரவை தேர்தல் பணிகள் குறித்து தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதி அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது பிப்ரவரி 3ம் தேதி தி.மு.க. பொதுக் குழு கூட்ட முடிவு செய்யப்பட்டது. தேர்தல் நிதிக்கு ரூ.11 லட்சத்தை கருணாநிதி வழங்கினார்.
தமிழக சட்டப் பேரவை தேர்தல் அடுத்த ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகள், கூட்டணி குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் 04.01.2011 அன்று காலையில் நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் பகல் 12 மணிக்கு முடிந்தது.
கூட்டத்தில் நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், சுப்புலட்சுமி ஜெகதீசன், செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் இள.புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின் தி.மு.க. வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வர இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மேல்மட்ட தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் முதல்வர் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாக கூட்ட அரங்கில் நடந்தது. அப்போது பிப்ரவரி 3ம் தேதி சென்னை கலைஞர் அரங்கில் தி.மு.க. பொதுக் குழு கூட்டம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.
வர இருக்கும் பொது தேர்தலுக்கான தேர்தல் நிதியை ஒவ்வொரு மாவட்டத்திலும் திரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் முதல் கட்டமாக தேர்தல் நிதி அளித்தவர்கள் விவரம்:
முதல்வர் கருணாநிதி ரூ. 11 லட்சம்,
நிதி அமைச்சர் அன்பழகன் ரூ.1 லட்சம்,
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 250,
அமைச்சர்கள்
ஆற்காடு வீராசாமி ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்து 500,
துரைமுருகன் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம்,
வீரபாண்டி ஆறுமுகம் ரூ. 5 லட்சத்து 10 ஆயிரம்,
கே.என்.நேரு ரூ.5 லட்சத்து 4 ஆயிரம், ஐ.பெரியசாமி ரூ.5 லட்சத்து 5 ஆயிரம்,
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ரூ. 5 லட்சத்து 5 ஆயிரம்,
எ.வ.வேலு ரூ. 5 லட்சத்து 5 ஆயிரம்,
சுரேஷ்ராஜன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம்,
டி.ஆர்.பாலு எம்பி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம்,
டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி ரூ.4 ஆயிரம்,
பெ.வீ.கல்யாணசுந்தரம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம்,
சுப்புலட்சுமி ஜெகதீசன் ரூ.10 ஆயிரம்,
மு.கண்ணப்பன் ரூ.1500

ஆக மொத்தம் ரூ.44 லட்சத்து 17 ஆயிரத்து 250.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment