கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, November 3, 2010

முதல்வர் பதவியை சுயநலத்திற்கு பயன்படுத்தியவர் ஜெயலலிதா - முதல்வர் கருணாநிதி


முதலமைச்சர் பொறுப்பையும் அதிகாரத்தையும் சொந்த சுயநல வேட்டைக்காக பயன்படுத்தியவர் ஜெய லலிதா என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று (02.11.2010) வெளியிட்ட அறிக்கை:
ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 1&7&1991ல் அவரிடமிருந்த சொத்துக்களின் மதிப்பு ரூ. 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957. ஐந்தாண்டுகள் அவர் முதலமைச்சராக ஆட்சி செய்ததற்குப் பிறகு, 30&4&1996ல் அவருடைய சொத்துக்களின் மதிப்பு ரூ. 66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரம். ஐந்தாண்டுகளில் மட்டும், ஜெயலலிதா சேர்த்த சொத்துக்களின் மதிப்பு ரூ. 64 கோடியே 42 லட்சத்து 89 ஆயிரத்து 43.
ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. சட்டத்தின் சந்துபொந்துகளில் புகுந்து, கின்னசில் இடம் பெறக் கூடிய அளவுக்கு, தனது சொத்துக் குவிப்பு வழக்கை கீழ்கோர்ட்டிலிருந்து சுப்ரீம் கோர்ட் வரை, பிறகு சுப்ரீம் கோர்ட்டில் இருந்து கீழ்கோர்ட் வரை பரமபத சோபன படத்தில் பார்ப்பதைப் போல மேலும் கீழும் இழுத்தடித்து வருகிறார். தனது நேர்மையை குறித்த காலத்தில் நிரூபிப்பதற்கு திராணியின்றி தாமதம் செய்து வருகிறார். இதுதான் ஜெயலலிதா பிராண்ட் நேர்மைக்கு அடையாள மா?
சென்னைக்கு அருகில் சிறுதாவூர் என்ற இடத்தில் 17 ஏக்கர் நிலப்பரப்பில், 30 ஏக்கர் அரசு நிலத்தையும் வளைத்து, 108 குளுகுளு வசதிகளுடனான அறைகளுடன் கட்டப்பட்டுள்ள ஆடம்பர பங்களாவிற்கு அடிக்கடி சென்று சுகவாசம் செய்கிறாரே இதுதான் ஜெயலலிதா சொல்லும் நேர்மைக்கான குறியீடா?
முதல்வராக இருந்த போது, அரசுக்குச் சொந்த மான டான்சி நிலத்தை, குறைந்த விலையில் வாங்கிக் கொண்டாரே, இதுதான் நேர்மைக்கான அறிகுறியா? டான்சி நிலபேர வழக்கில் டான்சி நில ஆவணங்களில் கையெழுத்துப் போட்டுவிட்டு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக, தன்னுடைய கையெழுத்து இல்லை என்று சத்தியப்பிரமாணம் செய்து சொன்னாரே, இது தான் நாணயத்திற்கு ஜெய லலிதா வழங்கும் சான் றிதழா?
ஜெயலலிதா தனது மனசாட்சிக்குப் பதில் சொல்லும் வகையில், டான்சி நிலத்தை அரசிடமே திரும்ப ஒப்படைத்து விட வேண்டும் என்று டான்சி வழக்கில் உச்ச நீதி மன்றமே ஜெயலலிதாவின் நேர்மைக்கும், நாணயத்திற்கும் சான்றிதழ் வழங்கியுள்ளதே.
கோடநாடு எஸ்டேட் டில், முறையான அனு மதி பெறாமல், பொய்யான தகவலை அளித்து, ஊராட்சி மன்றத்தின் அனுமதியைப் பெற்றதாக கூறி, சுற்றுச்சூழலை கெடுக்கும் வண்ணம், நீதிமன்ற உத்தர வை மதிக்காமல் ஆடம்பர பங்களா கட்டியுள்ளாரே, சுகவாசியான ஜெயலலிதாவின் நேர்மைக்கான இலக்கணம் இதுதானா?
கொடைக்கானல் பிள சன்ட் ஸ்டே ஓட்டலுக்கு விதிமுறைகளை மீறி அனு மதி கொடுத்தார் என்று தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க.வினர் வன்முறை வெறியாட்டங்களில் ஈடு பட்டு, தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண் பல்கலை பேருந்தை தீயிட்டுக் கொளுத்தியதால், மூன்று மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்டு, துடிதுடித்துச் செத்தார்களே. அப்போது, அந்த மாணவிகளுக்காக ஓர் இரங்கலைக்கூட தெரிவிக்காத மனசாட்சி இல்லாத ஜெயலலிதா, இன்றைக்கு அரசியல் நேர்மையைப் பற்றி இலக்கியம் எழுதத் தொடங்கியுள்ளார்.
முதல்வராக இருந்தபோது, சட்டப்பேரவை யில் எதையும் விவாதித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிற பக்குவம் இல் லாமல், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் பொறுமை இல்லாமல், ஆணவ போக் குடன் நடந்து கொண்டாரே இதுதான் ஜெயலலிதா எடுத்துக் காட்டும் ஜனநாயகத்திற்கான வழிமுறையா?
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவைத் தலைவர், பொறுப்பேற்ற உடனேயே, முதல் பணியாக சட்டப் பேரவையிலேயே ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கிய அநாகரிகப் போக்கும், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண் டதும், ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கிய கலாச்சாரக் கேடும் அரங்கேற்றப்பட்டன. இதுதான் ஜெய லலிதா வழிகாட்டும் ஜனநாயகத்தின் பாதையா?
லட்சக்கணக்கான அரசு ஊழியர்களையும், அரசுப் போக்குவரத்து ஊழியர்களையும் இரவு நேரத்தில் கைது செய்தார். மக்கள் நலப்பணியாளர்கள் 10 ஆயிரம் பேர், சாலைப் பணியாளர்கள் 10 ஆயிரம் பேர், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் 20 ஆயிரம் என எந்த காரணமும் சொல் லாமல் வீட்டுக்கு அனுப்பினார். பட்டப்பகலில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்தார்.
பேரவையிலேயே நீதிமன்றத்தையும், நீதியரசர்களையும் இழிவுபடுத்திப் பேசியதோடு, நீதியரசர் ஒருவரது உறவினர் மீது கஞ்சா வழக்கு போட்டு ஜனநாயகத்தின் தூண்கள் எனக் கருதப்படும் சட்டப் பேரவை, நிர்வாகத் துறை, நீதித் துறை, பத்திரிக்கைத்துறை என அனைத்தும், மிகவும் சாதாரணமானவை, தனது காலடியில் உள்ளவை என்ற எண்ணத்தில் குலைத் து, குழப்பத்தில் ஆழ்த்திய ஜெயலலிதாவின் ஜனநாயகத்தைப் பற்றி தமிழ்நாடும், இந்தியத் திருநாடும் நன்றாகவே அறிந்திருக்கிறது
முன்னாள் முதலமைச்சர் என்று கருதாமல், நள்ளிரவில் தாக்குதல் நடத்தி தூக்கிச் சென்று கைது செய்ததோடு, நீதிபதி அறிவுரைக்கு மாறாக என்னை பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல் லாமல், சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றவர் ஜெயலலிதா.
முன்னாள் மேயர் ஸ்டாலினை மேம்பாலம் கட்டியதிலே முறைகேடு என்று பழி சுமத்தி இரவில் கைது செய்து, மதுரை சிறை யில் அடைத்தவர் ஜெயல லிதா. தனது வளர்ப்பு மகனும், சிவாஜி கணேசன் வீட்டு மாப்பிள்ளையுமான வி.என். சுதாகரனை, தூங்கிக் கொண்டிருந்த போது தட்டியெழுப்பி, 16 கிராம் ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறி, சிறையிலே அடைத்தவர் ஜெயலலிதா. கஞ்சா கடத்தியதாக மதுரையைச் சேர்ந்த இளம்பெண் செரி னாவை கைது செய்து, கொடுமைப்படுத்திய ஜெய லலிதா, இந்தியத் திருநாடு ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற உண்மையை காற்றிலே பறக்கவிட்டு தமிழகத்தில் உள்ள கிறித்துவச் சிறு பான்மை மக்களுக்கு எதி ராக மதமாற்றத் தடைச் சட்டத்தை நிறைவேற்றி னார். முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளித்தால், நாளை கிறித்துவர்களும் இட ஒதுக்கீடு கேட்பார்கள். பிறகு மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே, இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மைச் சமூகத்தினர் அந்தச் சலுகைகளையெல்லாம் அனுபவிக்கவில்லை என்று சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிரான தனது எண்ணத்தை வெளிப்படுத்தியவர் ஜெயலலிதா.
“அதிகாரிகளிடம் வேலை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது குறித்து, அதிர்ச்சியடைந்த நான் இப்போது ரிங் மாஸ்டர் போல சாட்டையடி கொடுத் 1397776754 வேலை வாங்கி வரு கிறேன். எவ்வளவு அடி கொடுத்தும் அதிகாரிகளுக்கு வேலையில் சிரத்தை இல்லை. அதிகாரிகளிடம் இழந்து விட்ட பணியார்வத்தை மீண்டும் ஏற்படுத்த சாட்டையடி கொடுத்து வருகிறேன்” என்று அரசு ஊழியர்களை சட்டப் பேரவையிலேயே கேவலப்படுத்தியவர் ஜெயலலிதா. முதல்வர் என்ற பதவி வழங்கிய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கிய ஜெயலலிதா, இப்படி நேர்மைக்கும், நாணயத்துக்கும் கொடுத்துவரும் அர்த்தத்தைப் பற்றியும், ஜனநாயகத்தைப் பற்றிய அவரது அணுகுமுறையைக் குறித்தும் ஏராளமான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டலாம்.
ஜனநாயகத்துக்கும், நாணயத்துக்கும் அவர் கொண்டிருக்கும் அர்த்தமும், அவர் பின்பற்றும் அணுகுமுறையும் கண்டு ஜனநாயகத்திலும், நேர்மை நாணயத்திலும், குறைந்தபட்ச நம்பிக்கை கொண்டவர்கள் கூட, அதிகபட்சமாக நகைப்பார்கள்.
செய்ய வேண்டியதை செய்யாமலும், செய்யக் கூடாததைச் செய்தும் முதலமைச்சர் பொறுப்பையும், அதிகாரத்தையும் சொந்த சுயநல வேட்டைக்காக பயன்படுத்திய ஜெயலலிதா, இன்றைக்கு ஜனநாயகம், நேர்மை, நாணயம் இவற்றைப் பற்றியெல்லாம் பேசுவதை நமது ஜனநாயக மாண்புகளிலே அக்கறையும், ஆர்வமும் உள்ளவர்கள் கவனித்து, கணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் இவை அனைத்திற்கும் காலம்தான் பதில் சொல்லும்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment