கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, November 5, 2010

ஆற்காட்டார் அறை சீல் வைக்கப்பட்டதா? ஜெயா டிவிக்கு கண்டனம்அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறித்து ஜெயா டிவி செய்தி வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில், ‘’தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி புனித ஜார்ஜ் கோட்டையில் ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறை இன்று சீல் இடப்பட்டது என்று; மக்களை குழப்ப வேண்டும் என்பதற்காக உள்நோக்கத்துடன் ‘‘ஜெயா’’ தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டதாக அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.


அவரது அறை சீல் இடப்படுவது திடீரென்று இன்று மட்டும் நடைபெற்ற நிகழ்வு அல்ல. அவரது அறை முதலமைச்சரின் அறைக்கு மிக அருகிலேயே இருப்பதால்; பாதுகாப்பு காரணத்திற்காக முதலமைச்சர் அறை தினமும் அலுவல் நேரம் முடிந்ததும், சீல் இடப்படுவதைப் போல, அவரது அறையும் சீல் இடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, தற்போது மின்துறை அமைச்சரின் அலுவலக அறை அப்போது முதலமைச்சரின் செயலாளருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

அப்போதும் இந்த அறைகள் சீல் இடப்படும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

03.11.2010 அன்று அலுவல் நேரம் முடிந்ததும் ஆர்க்காடு வீராசாமி அவர்களது அறை சீல் இடப்பட்டது. 04.11.2010 அன்று அவர் வேறு பணியின் காரணமாக அலுவலகத்திற்கு வராததால், அவரது அறை திறக்கப்படவில்லை. இதற்கும் ஒரு காரணம் கற்பித்து, அதைச் செய்தியாக்கி, அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியிருப்பது கண்டனத்திற்குரியதாகும்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுNo comments:

Post a Comment