கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 17, 2010

ஐந்து நாட்கள் சத்துணவுடன் முட்டை: கலைஞர் ஆணை

125 கோடியே 35 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவில் பள்ளி மாணவ மாணவியருக்கு இனி வாரம் ஐந்து நாட்கள் சத்துணவுடன் முட்டை வழங்கப்படும் என, முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, அண்ணா நூற்றாண்டு நினைவாக இந்த பிரம்மாண்டமான நூலகத்தைத் திறந்து வைக்கும் இந்நேரத்தில் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு சிறுவர், சிறுமியர்க்கும் வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் ஐந்து நாட்களிலும் வேக வைத்த முட்டைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பினை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரும் நோக்கில், தற்போது பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு வாரத்தில் மூன்று நாட்களில் சத்துணவுடன் முட்டைகள் வழங்கப்பட்டு வருவதை, இனி வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் ஐந்து நாட்களிலும் சத்துணவுடன் வேக வைத்த முட்டையை வழங்கிட முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

மேலும், முட்டை உண்ணாத மாணவ மாணவியர்க்கு வாரத்தில் ஐந்து நாட்களிலும் முட்டைக்குப் பதிலாக வாழைப்பழம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார். சத்துணவுடன் ஐந்து முட்டை வழங்கும்

திட்டத்துடன் ஏற்கனவே செவ்வாய்க்கிழமை 20 கிராம் வேகவைத்த கொண்டைக் கடலை அல்லது பச்சைப் பயறு, வெள்ளிக்கிழமை 20 கிராம் வேகவைத்த உருளைக் கிழங்கு ஆகியவைகளும் தொடர்ந்து வழங்கப்படும்.

இத்துடன், சத்துணவுக் கூடங்களில் காய்கறி, விறகு ஆகிய செலவுகளுக்காக ஒரு குழந்தைக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 44 பைசா என்பதும் உயர்த்தி வழங்கப்படும்.

இந்த ஆணையின் காரணமாக 57 இலட்சத்து 75 ஆயிரம் பள்ளி மாணவ மாணவியர் பயன் பெறுவர்; அரசுக்கு ஆண்டுக்கு 125 கோடியே 35 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment