கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, September 28, 2010

செம்மை நெல்லுக்கு ராஜராஜன் பெயர் - முதல்வர் கருணாநிதி அறிவிப்பு


தஞ்சையில் நடைபெற்ற பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு விழாவில் செம்மை நெல்லுக்கு ராஜராஜன் 1000 என்று முதல்வர் கருணாநிதி பெயர் சூட்டினார்.
விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இரண்டாவது தலைமுறைக்கும் நான் வாழ்த்து கூறும் வகையில் வயது உயர்ந்துள்ளது. ஆனால், அதுபற்றி நான் கவலைப்பட்ட போதெல்லாம் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுவிழா வருகிறது. அதை காணும் வாய்ப்பு ஏற்பட போகிறது என்ற மகிழ்ச்சியுடன் நான் இருப்பேன். அப்படிப்பட்ட விழா மாமன்னர் ராஜராஜனுக்கு பெருமை, புகழ் சேர்த்திருக்கிறோம்.
ராஜராஜன் வசூலித்த பல்வேறு வரிகள் குறித்து பேராசிரியர் அன்பழன் குறிப்பிட்டார். அந்த வரிகள் அனைத்தும் பொன்னும், நெல்லுமாகச் செலுத்த வேண்டும். 2 ஆண்டுகள் வரி கட்டவில்லையெனில் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு பொக்கிஷத்துக்கு போய்விடும். திரட்டிய நிதி மக்களின் நலவாழ்வுக்கும், சுகம், வீரத்தை காப்பாற்ற, நாட்டைக் காப்பாற்ற ஆற்ற வேண்டிய வீரப்பணிகளுக்காகவும் வரிப்பணம் செலவிடப்பட்டது. இப்பணம் வருவாய் பற்றி உங்கள் காதில் விழும் செய்திகளை நான் கவனிக்காமல் இல்லை. வரிகளை வசூலித்து மக்களின் பணத்தைத் திரட்டி இன்று தமிழக அரசு ஒவ்வொரு தலையிலும் இவ்வளவு ரூபாய் கடன் வைத்திருக்கிறது என்று கணக்கிட்டுப் பேசுவதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு மனிதனும் இவ்வளவு ரூபாய் தர வேண்டும் என்று எந்த நாட்டிலும், இந்தியாவிலும் இல்லை. குறிப்பாக தமிழகத்திலும் இல்லை. இருக்கப்போவதும் இல்லை. அப்படி வந்தாலும் இருக்கவிடப் போவதில்லை.
ஊர் அவை உறுப்பினர்களுக்கு பல்வேறு வகையான தகுதிகள் வகுக்கப்பட்டன. அவர்கள் எண்ணத் திலும், செயலிலும், நேர்மையாகவும் 30&75க்குள் வயதுக்குள்ளும், யாரையும் ஏமாற்றியதாக புகார் வராதவராகவும், ஒழுக்கமாக வாழ்ந்தவராக இருக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு உட்பட்டு எந்த நிறுவனத்திலும் உறுப்பினராக இருக்கக்கூடாது. வழக்குகள், குற்றவாளி, பொய்சாட்சி கூறியவர்கள், அவப்பெயர் எடுத்தவர்கள், குற்றப் பதிவு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டவர், லஞ்சம் வாங்கியவர்கள், பொய் கையெழுத்துப் போட்டவர்கள், அபராதம் செலுத்தியவர்கள், கையெழுத்துப் போட்டுவிட்டு அது என் கையெழுத்து இல்லை என்பவர்கள் வாழும் காலத்தில் ராஜராஜன் காலத்தைய விதிமுறைகள் ஆச்சர்யமாகத்தான் தோன்றும். தேர்தலின்போது கூட்டத்தில் ஒரு குடம் வைக்கப்படும். குடும்பத்துக்கு ஒருவர் தங்களுக்கு பிடித்தவர் பெயரை ஓலையில் எழுதி அதிகாரி முன் குடத்தில் போட வேண்டும். அதை கட்டி, குடத்தின் மேலே குடும்பத்தின் பெயர் எழுத்தப்படும். ஓலைகள் குலுக்கப்பட்டு ஒரு ஓலை குழந்தையால் எடுக்கப்படும். அரசு அதிகாரி அரசு அதிகாரி ஓலைப்பெயர் படிப்பார். அவ்வாறு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அத்தகைய புகழ்வாய்ந்த ராஜராஜன் பற்றி தமிழக மக்கள் நாள்தோறும் சிந்திக்க, நினைக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். ஏற்கெனவே இந்த விழாவையொட்டி பல்வறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன.
தஞ்சை மேம்பாட்டுக்காக ஸீ25 கோடி தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் மூலம், பஸ் நிலையம¢ மேம்பாடு, சாலை மேம்பாடு, சுகாதார வளாகம், ஒளிவிளக்கு, பெரிய கோயில் முன்புறத்தில் கான்கிரீட் தளம் போடுவது உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 7 முக்கிய பாலங்கள் ஸீ9.35 கோடியில் அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டது. ஸீ2.35 கோடியில் தஞ்சை மையத்தில் கல்லணைக்கால்வாய் கரைப்பகுதி மேம்படுத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் புதிய விபத்து சிகிச்சைப் பிரிவும் புற்றுநோய் பிரிவு ஏற்படுத்தப்படும். சமுத்திரம் ஏரி மேம்படுத்தப்படும். தமிழக அரசு அளிக்கும் தொகை மட்டுமின்றி மத்திய அரசும் ரூ.25 கோடி வழங்குவதாக மத்திய அமைச்சர் நாராணயசாமி கூறியுள்ளார். அப்பணம் இன்னும் வந்து சேரவில்லை. அதற்கு அவர் ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ராஜராஜன் நினைவாக அஞ்சல் தலை, ராஜராஜன் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. அனுமதி பெற்றுத்தந்த நண்பர்கள், மத்திய அமைச்சர்கள், எம்பி.க்களுக்கு நன்றி. ஏற்கெனவே தமிழக அரசால் செம்மை நெல் அறிமுகப்படுத்தப்பட்டது. நல்ல உற்பத்தி திறன் கொண்ட செம்மை நெல்லுக்கு ராஜராஜன் 1000 என்று தமிழக அரசு சார்பில் பெயரிட்டு அறிவிக்கிறேன். ஐஆர் 8 போல், ஐஆர் 20 போல் இந்த பெயர் அமையும். ராஜராஜன் புகழ் பரவ இது உதவும். மக்கள் விரும்புவதுபோல் சோழர்கால சிறப்புக் கண்காட்சி மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படும் என்றார் முதல்வர்

No comments:

Post a Comment