கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, September 18, 2010

1.60 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு ஸீ17.47 கோடி ஊக்கத்தொகை - முதல்வர் கருணாநிதி வழங்கினார்


ஒரு லட்சத்து 60 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களுக்கு ஸீ17 கோடியே 47 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் கருணாநிதி வழங்கினார். 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பால் உற்பத்தியாளர் குடும்ப 32 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை (லேப்டாப்) முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
2006 1398041963 தி.மு.க. அரசு அமைந்த போது தமிழகத்தில் 17 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களில் 6 மட்டுமே லாபத்தில் செயல்பட்டு வந்தன. அரசின் ஆக்கபூர்வ நடவடிக்கையால் தற்போது 13 ஒன்றியங்கள் லாபம் ஈட்டுகின்றன.
பிரதம சங்கங்கள் லாபத்தில் செயல்படும் போது அதன் உற்பத்தியாளர்களுக்கு பங்கு ஈவுத்தொகை, ஊக்கத் தொகை, போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதுதவிர, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் நிகர வருமானத்தில் ஒரு பகுதி உற்பத்தியா ளர்களுக்கு கூடுதல் ஊக்கத் தொகையாக 2007&2008ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.
திருச்சியில் 2008&2009, 2009&2010 ஆண்டு ஒரு லட்சத்து 108 பால் உற்பத்தியாளர்களுக்கு ஸீ10 கோடியே 24 லட்சத்து 3 ஆயிரம், கோவையில் 20 ஆயிரத்து 479 பால் உற்பத்தியாளர்களுக்கு ஸீ4 கோடியே 14 லட்சத்து 63 ஆயிரத்து 815, மதுரையில் 32 ஆயிரத்து 867 பால் உற்பத்தியாளர்களுக்கு ஸீ2
கோடியே 98 லட்சத்து 37 ஆயிரம், கன்னியாகுமரியில் 6 ஆயிரத்து 642 பால் உற்பத்தியாளர்களுக்கு ஸீ 10 லட்சத்து 40 ஆயிரத்து 75 ரூபாய் வீதம் மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 94 பால் உற்பத்தியாளர்களுக்கு ஸீ17 கோடியே 47 லட்சத்து 44 ஆயிரத்து 158 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட 9 பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகைக்கான காசோலைகளை கோட்டையில் நேற்று முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஒன்றிய அளவில் அதிக மதிப்பெண் பெற்ற பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்குப் பால் வழங்கும் உறுப்பினர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 17 மாணவர்களுக்கும் இணையம் மற்றும் ஒன்றியப் பணியாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கும் பிரதம பால்கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கும் ஆக மொத்தம் 32 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
அப்போது, பால்வளத் துறை அமைச்சர் மதிவாணன், கால்நடை பாராமரிப்பு, பால்வள துறைச் செயலாளர் எம்.பி. நிர்மலா, பால்வளத் துறை ஆணையர் அபூர்வ வர்மா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment