கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, July 10, 2011

இப்போது உள்ள இளைஞர்களுக்கு முன்பு அதிமுக அரசு எப்படி இருந்தது என்று தெரியாது: பரிதிஇளம்வழுதி


சிதம்பரம் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழா. கழக உயர்நிலை செயல்திட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டம் சிதம்பரம் விளங்கியம்மன்கோவில் தெருவில் நடந்தது.


கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி கலந்துகொண்டு பேசுகையில்

தி.மு.க.தோல்வியை கண்டு துவண்டு விடுவது கிடையாது. வெற்றியை கண்டு பூரிப்படைவதும் கிடையாது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. அரசு தொடர்ந்து இருந் திருந்தால் தமிழ்நாடு சொர்க்கபுரியாக மாறி இருக்கும். அ.தி.மு.க. வெற்றிக்கும் தி.மு.க. தோல்விக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. 17 லட்சம் வாக்குகள்தான். அதில் 15 லட்சம் வாக்குகள் புதிய வாக்காளர்கள். மீதியுள்ள 2 லட்சம் வாக்காளர்கள் தி.மு.க.வினர் மாற்றி போட்டதால் தான். இப்போது உள்ள இளைஞர்களுக்கு முன்பு அ.தி.மு.க.அரசு எப்படி இருந்தது என்று தெரியாது.


தெரிந்திருந்தால் இப்படி வாக்குகளை மாற்றி போட்டு இருக்க மாட்டார்கள். தற்போது அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற 2 மாதத்திற்குள் பல்வேறு திட்டங்களை காணவில்லை. கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் காணாமல் போய் விட்டது.


தமிழ்நாட்டில் தேர்தல் நடந்த போது தான் கேரளாவிலும் தேர்தல் நடந்தது.அங்கு பட்ஜெட் போட்டு விட்டார்கள். ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 2 மாதம் ஆகியும் இன்னும் பட்ஜெட் போடவில்லை.சமச்சீர் கல்வி ரத்து செய்து விட்டார். இதற்காக குழு அமைத்து ஆய்வு செய்ய ஐகோர்ட்டு கூறியது. அதற்குள் 10 ம் வகுப்பிற்கு புத்தகம் அச்சடித்து விட்டார்கள்.இதை நீதிபதியே கண்டித்து அறிக்கை தாக்கல்செய்யும் முன்பு புத்தகம் அச்சடிப்பது சரியா? இது தொடர்பாக வழக்கு தொடரலாமே?என்று கேள்வி கேட்கிறார்.


சமச்சீர் கல்வியை ரத்து செய்து விட்டதால் மாணவர்கள் எந்த பாட புத்தகத்தை படிப்பது என்று தெரியாமல் ரோட்டோரம் அலைந்து திரிகிறார்கள். பூங்காவிற்குள் சுற்றி திரிகி றார்கள்.தலைமை செயலக கட்டிடம் மோசமாக உள்ளது.ஆகவே புதிய தலைமை செயலகம் கட்ட வேண்டும் என்று கூறியதே ஜெயலலிதா தான்.அதற்காக ராணி மேரி கல்லூரியை இடிக்க போவதாக கூறினார்.


பிறகு முன்னாள் மாணவர்கள் உள்பட அனைவரும் போராட்டம் நடத்திய பிறகு அதை கைவிட்டு விட்டார்.ஆனால் ரூ.1200 கோடி செலவில் பசுமை கட்டிடமாக புதிய தலைமை செயலகத்தை கருணாநிதி கட்டி உள்ளார்.ஆனால் இதில் முறைகேடு நடந்திருக்குமோ என்று ஜெயலலிதா கூறுகிறார்.புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும் உரிமையை வாங்கி கொடுத்ததும் கலைஞர்தான்.அப்படி என்றால் அவர் கொடியேற்றாமல் இருப்பாரா?

சூரியனை இலையாலும், கையாலும் மறைக்க முடியாது.நான் எதை குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆகவே மீண்டும் கலைஞரை முதல் அமைச்சராக்க நாம் எழுச்சியுடன் பணியாற்ற வேண்டும்.'

இவ்வாறு முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி கூறினார்.

மின்சார உற்பத்திக்காக கலைஞர் உருவாக்கிய திட்டத்தை நிறுத்த முடியுமா? -ஜெ.வுக்கு எ.வ.வேலு கேள்வி :

தமிழகத்தில் மின்உற்பத்தியை அதிகரிக்க கலைஞர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும், இதன்மூலம் அடுத்த ஆண்டு முதல் 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்க உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.


திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,


திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கலைஞர் மின்சார உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதால் 7,798 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி அடுத்த ஆண்டு முதல் கிடைக்க உள்ளது. ஒவ்வொரு மின் நிலையமாக திறக்க இருக்கிற இந்த நேரத்தில் நான் கேட்கிறேன். திமுக கொண்டு வந்த மக்களுக்கான நல்ல திட்டங்களை நிறுத்தி வரும் ஜெயலலிதா, மின்சார உற்பத்திக்காக கலைஞர் உருவாக்கிய திட்டத்தை நிறுத்த முடியுமா? வேண்டாம் வேண்டாம் இது கலைஞர் உற்பத்தி செய்த திட்டம் வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்களா என்றார்.

ஜெயலலிதா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் - நாஞ்சில் சம்பத் :

நெல்லையில் மதிமுகவின் 18வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்,


சமச்சீர் கல்வி திட்டத்தில் என்ன குற்றம். கலைஞர் அவர்கள் ஆட்சியில் அவர் கொண்டு வந்த திட்டங்களில் உன்னதமான திட்டம் சமச்சீர் கல்வி திட்டம் மட்டும்தான். சமச்சீர் கல்வி தற்போது தடை செய்யப்பட்டிருப்பதால், 80 லட்சம் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த கூட்டத்தின் வாயிலாக சொல்கிறேன் இதற்கு ஜெயலலிதா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சமச்சீர் கல்வி குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.

திமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதில் அதிமுக அரசு கவனம் செலுத்துகிறது: - கருப்பசாமி பாண்டியன் :

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுகவினர் மீது பொய் வழக்குகள் போடுவதில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது என, நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.


நெல்லை மாவட்ட திமுக சார்பில் உயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன்,


தென்காசி பகுதியில் ரயில்வே மேம்பாலம், சுரண்டை அரசுக் கலைக் கல்லூரி என நடைபெற்று வரும் திட்டங்கள் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை. கல்வெட்டுகளில் யார் பெயர் வந்தாலும், மக்கள் மனதில் யார் இந்த திட்டங்களை கொண்டுவந்தது என்று கல்வெட்டாக பதிந்துள்ளது.


தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், திமுகவினர் மீது பொய் வழக்குகள் போடுவதிலேயே அதிமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது. யார் மீது வழக்கப் போடுவது, என்ன வழக்குப் போடுவது என்று ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment