கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, July 18, 2011

சமச்சீர் கல்வி தீர்ப்பு வருவதற்கு முன் பழைய பாட புத்தகம் விநியோகம்


சமச்சீர் கல்வி தீர்ப்பு வரும் முன் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பழைய பாடபுத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக 1 மற்றும் 6ம் வகுப்புக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு வரையுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் அறிமுகப்படுத்துவதற்கு என ரூ.90 கோடி மதிப்பில் 4 கோடியே 49 லட்சம் பாடப்புத்தகம் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது. இதனை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான பாட புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பப்பட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் சமச்சீர் கல்வியை அரசு ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒரு குழு அமைத்து சமச்சீர் கல்வியின் பாடப்புத்தகத்தை 2 வார காலத்திற்குள் ஆய்வு செய்து அதன் அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இதன் மீது ஒரு வார காலத்தில் விசாரணை செய்து தீர்ப்பு கூற வேண்டும் என உத்தரவிட்டனர். ஆய்வு குழுவினர் அறிக்கையை தாக்கல் செய்து தற்போது விசாரணை முடிந்து தீர்ப்பு 18.07.2011 அல்லது 19.07.2011 அன்று வரவுள்ளது. தீர்ப்பில்தான் சமச்சீர் கல்வியா அல்லது பழைய பாடபுத்தக திட்டமா என தெரிய வரும்.
இதனிடையே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் பழைய பாடத்திட்டப்படி புத்தகத்தினை அச்சடித்து அந்தந்த மாவட்டத்தில் உள்ள பாடநூல் அலுவலகத்திற்கு அனுப்பி விட்டனர். மதுரை மாவட்டத்தில் உள்ள 251 பள்ளிகளுக்கும் பழைய பாடபுத்தகம் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை, மேலூர், உசிலம்பட்டி ஆகிய மூன்று கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு புத்தகம் வழங்குவதற்காக 3 மையம் தேர்வு செய்யப்பட்டு அந்த மையத்திற்கு 60 சதவீத பாட புத்தகங்கள் வந்துள்ளன. மீதியுள்ள புத்தகங்கள் ஒரு சில நாளில் வந்து விடும் என கல்வி வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்: மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகம் வருகிறது. வாங்கி வைத்து கொள்ளவும். நாங்கள் கூறும்போது பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என திடீரென்று கூறி பழைய பாடப்புத்தகத்தை அனுப்பி உள்ளனர்,’என்றார். எந்த பாடத்திட்டம் என்று தெரியாத நிலையில் பழைய பாடபுத்தகத்தை அரசு அனுப்பி வைத்திருப்பது ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு எப்போது? - மாணவர்களிடம் புதுக்குழப்பம் :

சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் 18.07.2011 அன்று விசாரணைக்கு வரும் வழக்குகளில் சமச்சீர் கல்வி வழக்கு இடம்பெறவில்லை.
சமச்சீர் கல்வி வழக்கில் வக்கீல்கள் வாதம் முடிந்து தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை கடந்த வாரம் ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் கடந்த 15ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா கடந்த 16ம் தேதி உயர் நீதிமன்ற விழாவில் பங்கேற்பதாக இருந்ததால் வழக்கில் வரும் 18ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று கூறப்பட்டது.
18ம் தேதிக்கான வழக்குகளின் பட்டியல் 17.07.2011 அன்று வெளியிடப்பட்டது. அதில் சமச்சீர் வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என்ற விவரம் இல்லை. எனவே இந்த வழக்கில் எப்போது தீர்ப்பு கூறப்படும் என்ற கேள்விக்கு இன்று பதில் தெரியலாம்.
சமச்சீர் கல்வி தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில், மாவட்டம் தோறும் பழைய பாடதிட்ட புத்தகம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால், பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எந்த பாடதிட்டம் என்பது முடிவாகாத நிலையில் கடந்த ஒரு மாதமாக மாணவர்களுக்கு வாழ்வியல் பயிற்சிகள் அளிக்க அரசு உத்தரவிடப்பட்டது. காவல் நிலையம், பூங்கா, வங்கி, உயிரியியல் பூங்கா என ஒவ்வொரு இடமாக மாணவ, மாணவிகளை அழைத்து சென்று நேரடியாக சுற்றி காண்பித்து பயிற்சி அளித்து வருகின்றனர். இதற்கிடையே சமச்சீர் கல்வியா? பழைய பாடதிட்டமா? என்று தெரியாத நிலையில், பழைய பாடதிட்ட புத்தகங்கள் ஒவ்வெரு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இது கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீர்ப்பு வரும் முன்பே ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கு புதிதாக அச்சடிக்கப்பட்ட 30 ஆயிரம் பழைய பாடதிட்ட புத்தகங்கள் கொண்டு வரப்பட்டன. இதுபோல தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பழைய பாடதிட்ட புத்தகங்கள் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்விதுறை அதிகாரிகள் கூறியதாவது:
பழைய பாடதிட்டத்தின்படி 30 ஆயிரம் பாடபுத்தகங்கள் வந்திருப்பது உண்மைதான். இதேபோல, சமச்சீர் பாடதிட்டத்தின்படி அச்சிடப்பட்ட 1 மற்றும் 6ம் வகுப்புக்கான சமச்சீர் பாட புத்தகங்களும் தற்போது வந்துள்ளன. கோர்ட் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதற்கேற்றபடி புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே புத்தகங்களை அரசு அனுப்பி வைக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment