கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 22, 2011

கொளத்தூர் பகுதி தி.மு.க. புதிய பொறுப்பாளர்


வட சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்து வி.எஸ்.பாபு ராஜினாமா செய்தார். இதையடுத்து கவுன்சிலர் ஆர்.டி. சேகர் வட சென்னை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். வி.எஸ். பாபுவை தொடர்ந்து அவரது தம்பியும் கொளத்தூர் பகுதி தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ரவியும் ராஜினாமா செய்தார்.

வி.எஸ்.ஜெ.சீனிவாசனும் பதவியை ராஜினாமா செய் துள்ளார். தி.மு.க. தலைமை கழகம் வி.எஸ்.ரவியின் ராஜினாமாவை ஏற்று புதிய பகுதி பொறுப்பாளரை நியமித்தது. இது தொடர்பாக தி.மு.க. பொது செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’வட சென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி கழக செயலாளர் வி.எஸ்.ரவி அப் பொறுப்பில் இருந்து விலகி விட்டதால் வ.முரளிதரன் கொளத்தூர் பகுதி தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment