கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, June 4, 2011

புதிய தலைமைச் செயலகம் குறித்த விசாரணை கமிஷனை திமுக சந்திக்கும் - மு.க.ஸ்டாலின்


�புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணி குறித்த விசாரணை கமிஷனை திமுக சந்திக்கும்� என்று சட்டப்பேரவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பேரவையில் கவர்னர் 03.06.2011 அன்று உரையாற்றினார். கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த சட்டப்பேரவை திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டி:
விருந்து என்றால் சாம்பார், ரசம், கூட்டு போன்றவை இருக்க வேண்டும். ஆனால், கவர்னர் உரையில் கூட்டு மட்டுமே வைத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. திமுக கொண்டு வந்த பல திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. பல திட்டங்கள் மாற்றி செயல்படுத்தப்பட்டுள்ளது.
அரசு வளர்ச்சித் திட்டம் என்பது நேர்கோட்டில் செல்வதாக இருக்க வேண்டும். ஆனால், கவர்னர் உரை கோணலாக சென்றுள்ளது. புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணி குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக எத்தனையோ விசாரணை கமிஷன்களை சந்தித்து இருக்கிறது. இந்த விசாரணை கமிஷனையும் கவலையில்லாமல் சந்திப்போம்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

No comments:

Post a Comment