கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, May 29, 2011

மரியம்பிச்சை மறைவுக்கு அனுதாபம்: குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க தி.மு.க. செயற்குழு தீர்மானம்


மரியம்பிச்சை விபத்தில் மரணம் அடைந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க அரசு முயற்சிக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருச்சி மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலை வகித்து கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் திமுக மீது பரப்பப்பட்ட பொய் யான ஊழல் பிரசாரங்களு க்கு இடையே திமுகவுக்கு வாக்களித்த ஒரு கோடியே 45 லட்சம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது.


கார் மீது லாரி மோதி மரணம் அடைந்த மரியம்பிச்சை மறைவுக்கு தலைவர் கருணாநிதி நேரில் சென்று மாவட்ட கழகம் சார்பில் அஞ்சலி செலுத்திட ஆணையிட்ட நிலையில் சில தீயசக்திகளின் தவறான பிரசாரத்தினால் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதால் அஞ்சலி செலுத்திட இயலவில்லை என்றாலும் அவர் மாற்று கட்சியில் இருந்தாலும் கட்சி மாச்சரியம் இல்லாமல் இன, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் அன்பு பாராட்டி செயல்பட்டதை மனதில் கொண்டு அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு திருச்சி மாவட்ட தி.மு.க சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வது.


மரியம்பிச்சை மரணம் அடைந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க இந்த அரசு முழு முயற்சி எடுக்கவேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.


மரியம்பிச்சை மறைவின்போது திருச்சி மாநகரில் உள்ள தி.மு.க. கொடி கம்பங்கள் வெட்டப்பட்டு, கல்வெட்டுக்கள் உடைக்கப்பட்ட போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.


திருச்சி மாவட்டத்தில் தலைவர் கருணாநிதியின் 88 வது பிறந்த நாள் விழாவை எந்த ஆண்டும் இல்லாத அளவிக்கு இந்த ஆண்டு மிகச்சிறப்பாக ஒவ்வொரு கிளைக்கழகம் தோறும் கழகத்தின் இரு வண்ணக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி, விளையாட்டு போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி கொண்டாடுவது.
மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நேரு பேசியதாவது:

அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் இறந்ததற்கும், திமுகவினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மரியம்பிச்சை இறந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் திமுக தலைவர் கருணாநிதி என் னை தொடர்பு கொண்டு, மரியம்பிச்சையின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த சொன்னார். நான் மாநகர திமுக செய லாளர் அன்பழகனை அழைத்து பேசியபோது அங்கு நிலைமை சரியில்லை, பதட்டமாக உள்ளது. எனவே அங்கு சென்றால் பிரச்னை ஏற்படும் என கூறியதால் அஞ்சலி செலுத்த செல்லவில்லை. எந்த வகையிலா வது திமுகவினரை பழிவாங்க ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர். இந்த விவகாரத்தில் அதிமுகவினரை விட தமுமுகவினர் தான் அதிக அளவில் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment