கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 23, 2010

கலைஞர் நகரம் கால்கோள்விழா: பிரபலங்கள் பேச்சு


விழாவில் மத்திய அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான தாசரி நாராயணராவ், ‘’ சினிமா கலைஞர்களுக்கு மதிப்பில்லா காலம் இருந்தது. நடிகர்கள் என்றால் வாடகைக்கு வீடு கூட தரமாட்டார்கள். அப்படிப்பட்ட தொழிலில் உள்ள திரைக்கலைஞர் களுக்கு கேட்டதுமே வீடு கட்டி தரும் திட்டத்தை வழங்கியவர் முதல்வர் கலைஞர்தான். திரைக்கலைஞர்களுக்கு முதல்வர் அளித்த இந்த சிறப்பால் நாங்கள் எல்லோரும் பெருமிதம் கொள்கிறோம். திரைக்கலைஞர்களுக்கு வங்கிக் கடன் எளிதில் வழங்கப்படவும் முதலமைச்சர் உதவவேண்டும்’’என்று பேசினார்.


பட அதிபர் ஏ.வி.எம். சரவணன்: சென்னை தினம் கொண்டாடப்படும் இன்றைய தினம் கலைஞர் நகரம் கால்கோள் விழா நடைபெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். முதல் வர் திரையுலகினருக்கு ஏற்கனவே இதுபோன்ற பல திட்டங்களை வழங்கியுள்ளார்கள். 1976ம் ஆண்டு டைரக்டர்ஸ் காலனியை அமைத்து கொடுத்தவர் கருணாநிதிதான். இதுபோல ஸ்டு டியோ கலைஞர்களுக்கும், குடியிருப்பு அமைத்து தந்திருக்கிறார். சினிமா தொழிலுக்கு அதிகம் செய்துள்ள முதல்வருக்கு நாம் என்றென்றைக்கும் நன்றியோடு இருக்க வேண்டும். இந்த முயற்சியில் ஈடுபட்ட வி.சி.குகநாதன், ராம. நாராயணன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.


நடிகர் சங்க பொருளாளர் வாகை சந்திரசேகர்: இன்றைக்கு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் பின்பற்றக்கூடிய பல சீரிய திட்டங்களை செயல் படுத்தி வருபவர் நம்முடைய முதல்வர். அந்த வகையில் இன்றைக்கு கலைஞர் நகர கால்கோள் விழா நடைபெற்று வருகிறது. பெரியார், அண்ணா கனவுகளை நிறைவேற்றும் வகையில் சமத்துவ புரங்களை மாநில முழுவதும் அமைத்து வருகிறார் நம் முதலமைச்சர். அதுபோல இன்றைக்கு இந்தியாவே பின்பற்றக்கூடிய ஜாதி, மொழி, இனம், மதம் போன்ற எல்லா எல்லைகளையும் கடந்த நிற்கும் கலைஞர்கள் நகரத்தை உருவாக்கியிருக்கிறார்.


நடிகை குஷ்பு : சென்னை வந்த ஆரம்ப காலங்களில் நான் வீடு இல்லாமல் கஷ்டப்பட்டேன். சினிமா கலைஞர்களுக்கு வீடு கிடைப்பதில் அவ்வளவு சிரமம் இருக்கிறது. ரொம்ப காலம் கழித்துதான் சொந்த வீடு வாங்கினேன். நான் சென்னை வந்து முதல் வீடு வாங்கிய போது ரொம்ப சந்தோஷப்பட்டேன். அந்த வீட்டில் தரையில் முகம் வைத்து படுத்தேன். அப்படியொரு நிம்மதியான தூக்கம் வந்தது. அது மாதிரி நிம்மதியான தூக்கம் எப்பவும் வந்தது இல்லை. எங்களை கதாநாயகன் -நாயகி என்கிறார்கள். பால் அபிஷேகம் பண்றாங்க, கோயில் கட்டுறாங்க. உண்மையில் நாங்கள் கதாநாயகிகள் அல்ல. படப்பிடிப்பில் ஐந்து மணிக்கே டீ கொடுத்து குடை பிடிச்சி லைட் போடுறாங்களே அவங்கதான் கதாநாயகர்கள். அவர்களிடம் சாப்பீட்டிங்களா என்று கேட்கும் போது முகத்தில் தெரியும் சந்தோஷத்த பார்க்க வேண்டும் அப்படி சந்தோஷம். இனி நீங்கள் யாரும் வீடு இல்லை என்று கஷ்டப்பட வேண்டியது இல்லை. யார் கிட்டயும் கை நீட்ட வேண்டாம். உங்களுக்கு சொந்தமா வீடு வரப்போகுது இந்த உதவி செய்த கலைஞருக்கு நன்றி சொல்றேன். நாமெல்லாம் ஒரே குடும்பம். சினிமாவில்தான் எந்த சாதி எந்த மதம்னு கேட்க மாட்டாங்க நான் 24 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். உங்க மகளா என்னை வளர்க்கிறீங்க எல்லோருக்கும் நன்றி.கலைஞர்களாகிய உங்களின் சார்பில் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, கலைஞர் காலில் விழுந்து வணங்கி நன்றியை வெளிப்படுத்தினார்.


நடன இயக்குநர் லாரன்ஸ்: வீட்டில் தாத்தா சொத்தை எழுதி வைத்தால் பேரக்குழந்தைகள் கட்டி அணைத்து முத்தம் கொடுப்பார்கள். அதே போல் நமக்கு வீடு தந்திருக்கும் இந்த பெரியவருக்கு எல்லோரும் முத்தம் கொடுக்க ஆர்வமாக இருக்கும். ஆனால் எல்லோரும் கொடுக்க நேரம் போதாது. அதனால் உங்கள் சார்பில் நான் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு முதல்வர் கன்னத்தில் முத்தமிட்டார்.


நடிகர் மம்முட்டி : கலைஞர் இருக்கும் பெரும்பாலான மேடைகளில் நான் இருப்பேன். இன்று எனக்கு நோன்பு நாள். அப்படியிருந்தும் வந்துவிட்டேன். இன்று அடிக்கல் நாட்டியிருப்பது கலைஞர் நகரம் மட்டுல்ல;கலைஞர்களின் நகரம். சினிமா கனவுகளுடன் எல்லோரும் சென்னைக்கு வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் பாரதிராஜா, பாலசந்தர் ஆகிவிடுவதில்லை. ரஜினி,கமல் ஆகிவிடுவதில்லை. அதற்காக எல்லோரும் சென்னையை விட்டு திரும்பிவிடுவதில்லை. இங்கேதான் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டு, சினிமாவில் முயற்சித்துக்கொண்டிருப்பார்கள்.நாம் எல்லோரும் வெற்றிபெற்றவர்களை மட்டுமே பேசிக்கொண்டிருப்போம். தோல்வி பெற்றவர்களை பார்க்கவே வெறுத்துவிடுவோம்.சினிமா கனவுகளுடன் சொந்த வீடு இல்லாமல் சென்னையில் இன்றும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக முதல்வர் கலைஞர் கருணாநிதி இலவச வீடு கொத்திருக்கிறார்.அதனால் அனைவரின் மனதிலும் கலைஞர் நிற்பார். பொதுவாக இந்த மாதிரி ஒரு திட்டத்தை நிறைவேற்ற வந்தால் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். அதையும், இதையும் கேட்டு இந்த திட்டத்தையே நிறுத்திடுவார்கள்.ஆனால் கலைஞர் இப்படியொரு திட்டத்தை நினைத்ததுமாதிரி முடித்துவிட்டார். இதற்காக அவர் யாரையெல்லாம் எப்படியெல்லாம் சமாளித்தாரோ.


சரத்குமார் :
நடிகர்களின் குழந்தைகளை பள்ளியில் கூட சேர்த்துக் கொள்ளாத நிலைமை இருந்தது. திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு என்ற கனவு இப்போது நனவாகியிருக்கிறது. என்னுடைய உதவியாளர் ஒருவர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது நான் வெளியூரில் இருந்தேன். அந்த மருத்துவனைக்கு போன் செய்து, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. காப்பாற்றுங்கள் என்று சொன்னேன். அவன் குணமான பிறகு எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்று கேட்டேன். அவர்கள், ‘தேவையில்லை, கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்தோம்’ என்றார்கள். அதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

விழாவில் ரஜினி பேசியதாவது: தமிழர்களுக்கு தெரியாத விசயமே கிடையாது. அவர்களுடைய அறிவுக்கு எட்டாத விசயமில்லை. அவர்களுடைய மனங்களை புரிந்து ஜெயித்துவிட்டால் அவர்களிடம் பெயர் வாங்கிவிட்டால் , இந்தியாவிலேயே பெயர் வாங்கின மாதிரி.இன்றைக்கு நான் பாம்பே சென்றாலும், ஆந்திரா சென்றாலும், மலேசியா சென்றாலும், எங்கு சென்றாலும் கலைஞரைப்பற்றித்தான் பேசுவேன். இந்த வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக இவ்வளவு ஆற்றலோடு இவ்வளவு அறிவோடு செயல்படுகிறாரே அது எப்படி முடிகிறது என்றே தெரியவில்லை வியந்து பேசுவேன்.ஒரு மகான் எழுதிய புத்தகத்தை படித்தேன். அதில், சுயநலத்திற்காக யாராவது வேலை செய்தால் உடனடியாக களைப்படைந்துவிடுவார்கள்.ஆனால் ஒரு மனிதன் பொதுநலத்திற்காக வேலை செய்தால் களைப்படையமாட்டான் என்று போட்டிருந்தது.அப்படித்தான் கலைஞரும் பொதுநலம் பொதுநலம் என்றே வாழ்கிறார்.இந்த திட்டம் பற்றி சில விசயங்கள் கேள்விப்பட்டேன். 99வருட குத்தகை, வாடகை,முதலில் பணம் கட்ட வேண்டும் என்றெல்லாம் சில பேர் சொன்னார்கள்.வீடு,நிலம்,ஆகியவற்றை வாங்கும்போது அதனை பார்த்துவிட்டு வேண்டாம் என்று திரும்பிவரக்கூடாது. அப்படி வேண்டாம் என்று வந்துவிட்டால் இவன் வேண்டாம் என்று சொல்லிறானே என்று மூதேவி நினைப்பாளாம்.

அதற்காக பின்னால் வருத்தப்படவேண்டிய வரும். எனவே வீடு,நிலம் வாங்கும்போது எந்த க்‌ஷடம் இருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு வாங்கவேண்டும்.எனவே இந்த அறுமையான திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும். பெரியார் நினைவு சமத்துவபுரம் போல இந்த கலைஞர் நகரம், ‘’கலைஞர் சமுத்துவபுர நகரமாக இந்த திரைக்கலைஞர்கள் நகரம் திகழ வேண்டும்.






No comments:

Post a Comment