கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, April 28, 2010

ஜெயலலிதாவைக் கண்டித்து வைகோ, நெடுமாறன் அறிக்கை விட்டார்களா? -சுப.வீரபாண்டியன்


ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரைத் திருப்பி அனுப்பிய பாவிகள் யார்? என்ற மாபெரும் உண்மை விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று (25.4.2010) இரவு 7.25 மணிக்குத் தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அடுத்து திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

மறுபடியும் நாம் இங்கே ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கூடவில்லை. ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமைஎப்படியாவது பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

பிரபாகரன் அவர்களின் தாயார் மருத்துவ உதவி பெற சென்னை வந்தபொழுது மீண்டும் மலேசியா-விற்குத் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது உலக மக்கள் அத்தனை பேரும் வேதனை அடைந்த செய்தியாகும்.

இணையதள சதி...!

ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரிய அவலத்தை, பின்னடைவை ஏற்படுத்த இந்த இனத்திற்கு எதிரானவர்கள் அல்லது அரசியல் ரீதியாகவே சில செய்திகளை இணையதளத்தின் மூலம் இன்றைக்குப் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

பார்வதி அம்மையார் வந்த செய்தி தோழர் தியாகு மூலம் நள்ளிரவு ஒரு மணிக்கு, அதுவும் பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்ட பிறகுதான் தகவலே தெரிந்தது. முதல்வர் அவர்களுக்கும் இந்த செய்தி தெரியாது. இரவு ஒன்பதே முக்கால் மணிக்கு பார்வதி அம்மையார் வந்திருக்கிறார். இரவு பத்தே முக்கால் மணிக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அய்யா நெடுமாறன் அவர்களுக்கும், வைகோ அவர்களுக்கும் மட்டுமே தெரிந்திருக்கிறது. கலைஞருக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தி இப்படி நடந்தால் எப்படியாவது போயஸ் தோட்டத்து அம்மையாரை ஆட்சியில் உட்கார வைத்துவிடலாம் என்று கருதுகிறார்கள். மண் குதிரையை நம்பி அவர்கள் இருவரும் ஆற்றில் இறங்கி நிற்கிறார்கள்.

நானும் சரி, திராவிடர் கழகமும் சரி, விடுதலை சிறுத்தைகளும் சரி என்றைக்கும் கலைஞர் அரசுக்கு ஆதரவானவர்கள்தான். கலைஞரை விட்டு விட்டு வேறு யாரை ஆதரிப்பது?

நமது தமிழக முதல்வர் கலைஞர் மூலமாக எப்படியாவது பார்வதி அம்மா அவர்களை திரும்ப சென்னைக்கு அழைத்து வந்து நாம் சிகிச்சை கொடுத்தாக வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்தபொழுது பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி அம்மையாரைத் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று வாஜ்பேயி அரசுக்குக் கடிதம் எழுதினாரே. இதைப் பற்றி வைகோ அவர்களும், அய்யா நெடுமாறன் அவர்களும் ஒரு வார்த்தை சொன்னதுண்டா? ஜெயலலிதாவைக் கண்டித்து அறிக்கை விட்டதுண்டா?

போயஸ் தோட்டத்துப் பாவிகள்

பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பிய பாவிகள் போயஸ் தோட்டத்துப் பாவிகள்தான். அங்கே போய் இவர்கள் இருவரும் உண்ணா விரதம் இருக்க வேண்டியதுதானே.

ஜெயலலிதாவை ஆதரிக்க உங்களை விட துரோகிகள் வேறு யார் இருக்க முடியும்? தமிழ் ஈழத்தைப் பற்றி இதே பெரியார் திடலில்தான் இந்த மண்ணில்தான் 30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த உணர்வைப் பெற்றோம். இன்றைக்கும் மாறவில்லை. புலி வேடம் போட்டு ஆடுகிறான்

புலியை விட புலி வேடம் போட்டு ஆடுகிறவர்களால்தான் ஆபத்து. புலி நெருப்பைக் கண்டால் ஓடிவிடும். புலிவேடம் போடுகிறவன் நெருப்பைக் கண்டால் ஓடமாட்டான். எனவே உங்கள் முயற்சி ஒரு நாளும் வெற்றி பெறாது.

தமிழ் ஈழமக்கள் கலைஞரைத்தான் நம்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment