எத்தனை தலைவர்கள் இருந்தாலும் தமிழ் வித்தகர் கலைஞருக்கு இணை ஏது சேவையும் தியாகமும் தீரமும் வீரமும் இவர் போல் எவருக்கும் கிடையாது ! வாழ்வாங்கு வாழவும் கலைஞரே ஆளவும் வாழ்த்துவோமே வாழ்த்துவோமே !!!
வாட்டும் சிறையில் நலிந்தாலும் கொடும் வஞ்சகர் கொடுமையில் மலிந்தாலும் காட்டிக் கொடுப்போர் தொடர்ந்தாலும் கடமை கண்ணியம் காக்க உயிர் வாழும் வாழிய கலைஞர் நற்றொண்டு அவர் வாழ்க வாழ்கவே பல்லாண்டு !
பகுத்தறிவென்னும் பாசறையில் நடை பழகி எழுந்த செம்பருதி அவர் வகுத்த திட்டம் தமிழ்நாட்டின் வாழ்வு செழித்தது வளம் பெருகி சோதனை ஆயிரம் சூழ்ந்தாலும் அதை துணிந்து வெல்லும் மனஉறுதி ! வாழிய கலைஞர் வாழியவே !!
வறியவருக்கும் வாழ்வளிக்கும் கொடும் வஞ்சகருக்கும் இடமளிக்கும் உரியவருக்கு பயனளிக்கும் நல்உத்தமருக்கு துணையிருக்கும் மேடையில் வீசிடும் பூங்காற்று அவர் பேச்சுக்கள் எல்லாம் தேன் ஊற்று வாழிய கலைஞர் வாழியவே...
கன்னித்தமிழில் கனல் பறக்கும் புதுக்கவிதை நடையில் புகழ் மணக்கும் கலைஞர் எழுத்தில் கலந்திருக்கும் உயர் கருத்துசெரிவில் நயம் இருக்கும் ! சித்திரை மாதத்து முழுநிலவு என ஜொலிக்கும் கலைஞர் மொழியழகு !! நூறாண்டு வாழவும் கலைஞரே ஆளவும் வாழ்த்துவோமே வாழ்த்துவோமே !!!
தொல்லைகளுக்கிடையே முல்லை சிரிப்பு நீ தொட்ட துறைகள் எல்லாம் தேன் சுரப்பு எல்லையே இல்லாதது உன் சிறப்பு தலைவா ஜெயாவை விரட்டுவது உன் பொறுப்பு ! வாழிய தலைவா வாழிய பல்லாண்டு