ஒரு கோடியில் அறக்கட்டளை துவங்கி
ஒவ்வொரு மாதமும் வட்டிப்பணத்தை
கல்வி மற்றும் மருத்துவத்திற்காக
கழகத்தின் நலிந்த தொண்டர்களுக்கு
கனிவோடு வழங்கி வரும்
கன்னித்தமிழே வாழ்க பல்லாண்டு
தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா
என ஏளனம் செய்தோர் வெட்கி தலைகுனியும் வகையில்
"தமிழ்வழிக் கல்வி" பயின்றோருக்கு வேலைவாய்ப்பில்
தனி இடஒதுக்கீடு தந்த
தன்னிகரற்ற தலைவரே
வாழ்க வாழ்க
கலை & அறிவியல் கல்லூரிகளில் கூட அசைன்மெண்ட் ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் எனச் சொல்லும் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் "பொறியியல் படிப்பில் தமிழ் வழிக் கல்வி"யை அறிமுகப் படுத்திய அமுதத் தமிழே வாழிய வாழியவே
வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் காவிரி நடுவர் மன்றத்தையும் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் காவிரி நதிநீர் ஆணையத்தையும் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பையும் பெற்றுத் தந்து அதை அரசிதழிலும் வெளியிடச் செய்த "காவிரி கொண்டான்" கலைஞர் வாழிய வாழியவே
அரசு உயர் பதவி எதையும் வகிக்காத அய்யா பெரியாருக்கு மரபை உடைத்து முழு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சி நடத்தியதோடு, "இதற்காக ஆட்சியையும் இழக்க தயார்" என மார் தட்டி பெரியாரைப் போற்றிய பெருந்தகையாளரே வாழ்க நீவிர் பல்லாண்டு
முதல் தலைமுறை பட்டதாரிகள் தொழிற்கல்வி (மருத்துவம், பொறியியல்) பயின்றிட கட்டண சலுகை அளித்து அவர்கள் வாழ்வில் சிறக்க வழி ஏற்படுத்திய தலைவரே வாழ்க பல்லாண்டு
நெருக்கடி நிலையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு வென்று இந்தியாவின் இரும்பு பெண்மணியாம் இந்திராவையே பின்னாளில் (சென்னை கடற்கரை பொதுக்கூட்டம்) "நெருக்கடிநிலை பிரகடனம் செய்தது தவறு" என நேரடியாக மன்னிப்பு கேட்டு மண்டியிட வைத்த மாவீரமே வாழ்க நீவிர் வானம் உள்ளவரை